| மசகு எண்ணெயின் விலையை 70-80 டொலர்களாகக் குறைக்கலாம்-ஒபெக் தலைவர் |
|
|
| வா.கி.குமார் | |
| 28. July 2008 07:21 | |
டொலரின் பெறுமதி உறுதியடைவதோடு, ஈரானுடனான முரண்பாடும் தீர்க்கப்படுமானால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையை 70 தொடக்கம் 80 டொலர்களாகக் குறைக்க முடியும் என ஒபெக் தலைவரும் அல்ஜீரிய சக்திவள அமைச்சருமான சகீப் கலீல் தெரிவித்துள்ளார்.
"டொலரின் பெறுமதி வலுப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், ஈரானுடனான பிரச்சினைக்கும் முடிவு எட்டப்பட வேண்டும். அவ்வாறு நடைபெறுமானால் மசகு எண்ணெயின் விலை 70 தொடக்கம் 80 டொலர்களாகக் குறைவடையும்" என்றும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் சங்கத்தின் (ஒபெக்) தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை லண்டன், நியூயோர் சந்தையில் 125 டொலர்களாகக் குறைவடைந்திருந்தது. இரு வார காலத்துக்குள் எண்ணெயின் விலை 25 டொலர்களால் குறைவடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|