| காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்: பாகிஸ்தானுக்கு ஒபாமா எச்சரிக்கை |
|
|
| வா.கி.குமார் | |
| 28. July 2008 14:25 | |
|
அமெரிக்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளை ஆதரிப்பதோடு அவர்களுக்கு நிதியுதவியும் பாகிஸ்தான் அரசு வழங்கி வந்துள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தூண்ட அடிப்படையாக உள்ளது. காஷ்மீர் தீவிரவாதிகளை வளர்த்துவிடுவது பாகிஸ்தானுக்கே எதிர்மறையாகவே அமையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் பிரதமர் கிலானி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்த வேண்டும். தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை மூடுவது ஆப்கானிஸ்தான் பாதுகாப்புக்காகவோ அல்லது அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவோ அல்ல. பாகிஸ்தானின் பாதுகாப்புக்காகத்தான் சொல்கிறேன் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட வேண்டும் என்றார் அவர். பாகிஸ்தான் புதிய பிரதமர் கிலானி அமெரிக்கா வருகிறா. தீவிரவாதத்த்தை ஒடுக்க அவர் முன் வைக்கும் யோசனைகளை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். ஆனால் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்களை மூட பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்றார் ஒபாமா. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுவது எதிர்மறையான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபருக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
