20. November 2008 16:59
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
27. August 2008 15:01
13. October 2008 13:01
11. October 2008 23:48
12. October 2008 00:13
துருக்கியில் குண்டுத்தாக்குதல்; 17 பேர் பலி, 150 க்கும் அதிகமானோர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 19:11
turky_blast.jpgதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற இரண்டு குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இஸ்தான்புல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்தான்புல்லின் குன்கோரன் பகுதியின் விமான நிலையத்திற்கு அருகேயுள்ள முக்கியமான கடைத்தெருப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன.

இந்தத் தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதல் எனத் தெரிவித்திருக்கும் துருக்கிய அரசாங்கம், தற்போது துருக்கியில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மையற்ற சூழலில் அங்கு மீண்டும் தீவிரவாதம் தலை தூக்கியிருப்பது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதலின் பின்னணியிலுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல்கள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துருக்கிய பொலிஸாருக்கு மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம், அந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து 3 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மிலியற் பத்திரிகையின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்களெனவும், இவர்கள் குண்டுவெடிப்பின் காரணமாக அச்சமடைந்து ஒழிந்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 
< முந்தைய   அடுத்த >