| வேற்றுமையில் ஒற்றுமை காணும் சுவிஸின் இணைப்பாட்சி ! (01.08) 718 வது ஆண்டு விழா காணும் சிறப்பு ! |
|
|
| ஈழப்பிரியன் | |
| 31. July 2008 18:12 | |
ஆகஸ்ட் 1ல் சுவிஸ்நாட்டில் மக்களிள் வீடுகள் தோறும் சிவப்பு நிறத்தில் வெள்ளைச் சிலுவை பொறித்த சுவிஸின் தேசியக் கொடி பட்டொளி வீசிக் காட்சி தரும். அன்றையை தினத்தில் ஒவ்வொரு கிராம, மற்றும் நகர ஆட்சிப் பகுதிகளிலும் பல இலட்சம் பிறாங்குகள் செலவில் இரவு சுமார் 9.30 அளவில் இடம் பெறும் பெரும் வாண வேடிக்கைகளை எவரும் பார்த்து மகிழலாம். இத்தகைய மகிழ்ச்சிக்கு சுவிஸ் நாடு பெருமைப்படும் காரணியாக இருப்பது அதன் இணைப்பாட்சி முறையிலான கன்ரோன்கள் அடிப்படையில் அமைந்த பல்லின மொழி ,மத ,பிரதேச, மக்கள், தமது வேறுபாடுகளின் மத்தியில் ஒன்றிணைந்து ஆட்சி நடத்தும் ,சமஷ்டி ஆட்சி அரசமைப்பு முறையாகும்.
1951ல் தந்தை செல்வாவும் திரு. வன்னியசிங்கமும் உருவாக்கிய தமிழரசுக் கட்சி இலங்கைச் சிறு பான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வாக சுவிஸ் நாட்டில் உள்ளது போன்ற சமஷ்டி அமைப்பே சிறந்தது எனத் தமது 1952 தேர்தல் விஞ்ஞாபனத்தில் கட்சியின் கொள்கையாக வெளிப்படுத்தினார்கள். தமிழரின் அரசியல் எழுச்சி வரலாற்றில் இதுவே காலத்தைக் கடந்தும் நிற்கவல்ல கொள்கை என்பதை அன்று தமிழரசுக் கட்சியைக் கண்டித்த ஏனைய அரசியல் கட்சிகள் அறிந்திருக்க வில்லை. ஆனால் சர்வதேச அளவில் இலங்கை அரசும் புலிகளும் 21ம் நூற்றாண்டில் நடத்திய அமைதிப் பேச்சுக்களின் போது சுவிஸ் இணைப்பாட்சி அரசமைப்பு முறை கவனத்தில் எடுக்கப் பட்டுள்ளமை சுவிஸ் இணைப்பாட்சி அமைப்பின் சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். நோர்வேயின் ஆதரவுடன் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுக்களின் போது ,அரசு சர்வதேச தரத்துக்கு ஏற்ற ஒரு மாற்று அரசியல் தீர்வை முன்வைக்காது காலத்தை இழுத்தடித்து. விஜயன் காலத்து மனநிலையும், துட்டகைமுனுவின் கட்டுக் கதையும், மகாவம்சத்தின் மதவெறியும், அநகாரிக தர்மபாலா எனப் படும் டேவிட் ஹேவவிதாரண என்ற இனவெறியனின் ஆரிய சிங்கள பௌத்த வாதச் சிந்தனைக்கும் வயப்பட்ட இலங்கைச் சிங்கள மககளின் அரச தரப்பினால் குடியாட்சி முறையின் நாகரிகம் நளினம் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொள்ளவோ ஏற்கவோ முடியாத போது எப்படி அரசியல் நாகரிகம் நிறைந்த மேற்கு உலகம் எதிர்பார்க்கும் தரத்தில் ஒரு மாற்று அரசியல் அமைப்புத் தீர்வை முன்வைக்க முடியும் ?
எனவே பல சுற்றுக்கள் , பல நகரங்கள் ஓடி ஓடிப் பேசியும் ஒரு முடிவும் காணாத நிலையில் மேதகு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் சார்பான தனித் தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றாக ஒரு தீர்வு தேடிய போது பலரின் கவனத்தையும் ஈர்த்தது சுவிஸின் இணைப்பாட்சி முறையே. இத்தனை சிறப்புக்குரிய சுவிஸின் அரசமைப்பு வெகு சுலபமாக உருவாகி இருக்கவில்லை. மாறாக பல நூற்றாண்டுகளாக பல போர்களையும் ஆக்கிரமிப்புக்களையும் மரணங்களையும் கண்டதன் விளைவாகவே இந்த அரசமைப்பு உருவானது. அதன் வiலாற்றை நாமும் அறிவதன் மூலம் எமக்கு மன உறுதியும் நம்பிக்கையும் இலட்சியப் பற்றும் பெற உதவும் என்பதால் தருகிறோம்;. 700 வருடங்களுக்கு முன்னர் சிறு சிறு துண்டங்களாக விளங்கிய மக்கள் குழுக்கள் தமது தனித்துவங்களை இழக்காது மற்றவரின் தனித்துவங்களையும் வேற்றுமையாகக் கருதாது மதித்துச் சமத்துவ முறையில் ஒரு ஆட்சி முறையால் எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாக்க உருவாக்கியதே சுவிஸின் இணைப்பாட்சி அமைப்பு. இப்படி அற்புதமான அமைப்பு எப்படி உருவானது ? அது ஈழத் தமிழருக்கு உதவுமா எனவும் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கம். சுவிஸில் அகழாய்வுகள் கி.மு. 3800 ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்விடங்கள் இருந்தமைக்கான பல தொல்லியல் சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன. கெல்ரிக் ( Celtic) இனத்தவர் கி.மு.1500ல் தாழ் நிலப் பகுதியில் வாழ்ந்துள்ளனர் மேற்குப் பகுதியில் (Helveti) ஹெல்வெற்றி இனத்தவர் இருந்துள்ளனர். இவர்கள் யேர்மானிய இனத்தவரின் ஊடுருவலில் இருந்து தப்பிக்கப் பிரெஞ்சுப் பகுதியான கோல் ( Gaul ) பகுதிக்கு நகர்ந்தனர். அவர்களை ( Bibracte )பிப்ராக்ர என்ற இடத்தில் ஜூலியஸ் சீசரின் படைகள் தாக்கி மீண்டும் பழைய இடத்துக்கே விரட்டி விட்டனர். ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியுடன் 534ல் புர்கிண்டி (Burgundy ) பிராங்கியரின் (Franks ) ஆட்சிக்குள்ளானது.. இரண்டு வருடங்களின் பின்னர் இப்பகுதிகள் அலமனிய (Alamanni ) பிரபுக்களின் ஆட்சியின் கீழ் வந்தன. அலமனியரின் பகுதியில் கிருஸ்துவ சமுதாயங்கள் மட்டுமே இருந்தன. 7ம் நூற்றாண்டில் ஐரிஷ் மதகுருமார் கிருஸ்தவ மதத்தை மீண்டும் இப்பகுதியில் அறிமுகப் படுத்தினர். கரோலிங்கிய (Carolingian ) அரசர்களின் ஆட்சியில் பிரபுத்துவ முறை வளர்ச்சி பெற்றது. மடாலயங்களும் ஆயர் இல்லங்களும்; சட்டம் ஒழுங்கு அமுலாக்கும் அடிப்படை அமைப்புகளாக விளங்கின. 10ம் நூற்றாண்டில் கரோலிங்கியரின் ஆட்சி அழிந்து சராசெனர் (Saracenes )வலேஸைக் (Valais ) கைப்பற்ற,
சுவிஸ் பாராளமன்றம் 1902
மகியர்கள் ( Magyars) பாசலை( Basel ) 917லும் செங்காலனை 926லும் வசப்படுத்தினர். 955ல் ஒட்டோ ( Otto )மன்னன் லெக்பெல்ட் ( Lechfeld ) போரில் மகியரை வீழ்த்திய பின்னரே சுவிஸ் பிரதேசங்கள் ரோமானியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. 12ம் நூற்றாண்டில் சுவிஸின் மேற்குப் பகுதியை உள்ளடக்கிய புர்கிண்டி பகுதியின் அதிகாரம் ஷெரிங்கன்( Zähringen ) பிரபுக்களிடம் வழங்கப்பட்டது. அவர்கள் 1157ல் பிறிபோக்கையும் (Fribourg ) 1191ல் பேர்ண் (Bern ) நகரமும் உட்படப் பல நகரங்களையும் உருவாக்கினர்.1218ல் 5வது பேக்ரொல்ட்டின் ( Berchtold V )மறைவுடன் பிரபுக்கள் ஆட்சி முடிந்து இப்பகுதிகள் ஆழுவோர் இன்றி புனித ரோமானிய பேரரசுக்குள் உட்படும் நிலை ஏற்பட்டது. 1231ல் ஊரியும் (Uri ) 1240ல் ; (Schwyz ) சுவைற்ஸம் ஆழுவோர் இல்லாது பேரரசின் நேரடிக் கட்டுப் பாட்டுக்குள் வந்தன. இக்காலத்தில் உன்ரவல்டனின் ; (Unterwalden) பெரும்பகுதி ஆழுவோர் இன்றி கத்தோலிக்க மடாலயங்களின் சொத்துக்களாயின.
1273ல் புனித ரோமன் பேரசர் ஹப்பேக்கைச் ( Habsburg )சேர்ந்த 1வது றுடொல்ப் ( Rudolph I ) ஊரி, சுவைற்ஸ், உன்ரவால்டன் பகுதிகளைத் தனது ஆட்சிக்குள் உட்படுத்தினார். இதற்கு எதிராக 1291ல் சதிப் புரட்சி மூலம் இந்த மூன்று பகுதிகளும் பழைய சுவிஸ் கூட்டமைப்பின் மையமாக உருவெடுத்து 1315 ல் மோர்காட்டனிலும் ( Morgarten ) 1386ல் ( Sempach ) செம்பாக்கிலும் இடம் பெற்ற போர்களின் மூலம் ஹப்ஸ்பேக்கரின் இராணுவத்தைத் தோற்கடித்து புனித கத்தோலிக்க ரோமன் பேரரசின் கீழ் கூட்டமைப்பாகத் தொடர்ந்தன. இவற்றுடன் 1313ல் கிளாருஸ் (Glarus )சுக் ( Zug )> லுசேர்ண் ( Luzern )> சூரிச் ( Zurich )> பேர்ண் ( Bern) கன்ரோன்கள் இணைந்து கொண்டன. ரொக்கன்பேர்க் மீதான கட்டுப்பாடு தொடர்பாக எழுந்த சண்டை காரணமாக 1440ல் சூரிச் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப் பட்டது.
கன்ரோன்கள் பட்டியலிடப்படும் பொழுது இந்த 8 கன்ரோன்களும் அவற்றின் முக்கியத்துவம் கருதி முதலில் இடம்பெறுவது வழக்கமாக உள்ளது இந்த எட்டுக் கன்ரோன்களின் கூட்டும் பழைமையானவை. 1499ல் ஸ்வாபிய ( Swabian) படையணியை வென்று புனித ரோமானியப் பேரரசிடமிருந்து சுதந்திரப் பிரகடனம் செய்து விடுதலை நோக்கிய ஆட்சியை அமைத்தன. 1523ல் ஹல்டிறிஜ் சுவாங்லி ( Huldrych Zwingli ) சூறிச்சின் தலைமைப் போதகர் ஆனார். அவரால் அங்கு புரட்டஸ்தாந்து மதம் பரவி சூறிச் நீதிமன்றமும் பெரும் பான்மை மக்களும் அம்மதப் பிரிவை ஏற்றுக் கொள்ள 5 மாநில மக்களின் வாழ்வில் இம்மதம் குறிப்பிடத் தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. ஏனைய மாநநிலங்கள் கத்தோலிக்க மதத்தில் தீவிர பற்றுக் கொண்டிருந்த காரணத்தால் 30 ஆண்டுகளாக கன்ரோன்கள் தமக்கிடையே 1529 முதல் 1531ல் சூவிங்லி போர்க் களத்தில் இறக்கும் வரை புரட்யஸ்தர்ந்து மதத்தவரும் கத்தோலிக்க மதத்தவரும் போராடினர். கத்தோலிக்க மதத்துக்கு இந்தப் போரில் பெரும் துணையாக சுவிஸ் இராணுவத்தின் வீர தீரமிக்க வலுவும் அதனை எவரும் வெற்றி கொள்ள முடியாத திறமையுமே இருந்தன. இதனால் 1506ல் பாப்பரசர் 2வது ஜூலியஸ் ( Julius II ) வத்திக்கான் பாதுகாப்புக்கு சுவிஸ் படையை ஈடுபடுத்தினார். இந்தச் சிறப்பு சுவிஸ் படைக்கு இன்று வரை தொடர்வது சுவிஸ் நாட்டுக்கும் அதன் இராணுவத்துக்கும் மக்களுக்கும் அவர்களின் மதப் பற்றுக்கும் கிடைக்கப் பெற்ற உலக அளவிலான கௌரவம் என்றே கருதப் பட வேண்டும். 1648ல் வெஸ்பாலிய உடன்படிக்கை மூலம் சுவிஸ் ரோமானியப் புனித அரசிலிருந்து சட்டரீதியாக விடுதலை பெற்றது. ஆனால் இந்த சுதந்திரம் அதிக காலம் நிலைக்க வில்லை. 1797ல் நெப்போலியனின் பிரெஞ்சுப் படை பலம் பெற்று 1798ல் சுவிஸ முழவதையும் கைப்பற்றி சிஸ்அலபினக் குடியரசாக்கிக் கன்ரோன்களை இல்லாமல் செய்தது. அந்நியரின் ஆட்சி என்பதாலும் பிரெஞ்சுப் படைகளில் தங்கியிருக்க வேண்டியதாலும் அரசியல: பொருளாதார சமூக நெருக்கடிகளும் பூசல்களும் நிறைந்த காலமாக இது இருந்தது. இதனால் 1803ல் நெப்போலியன் செய்து கொண்ட சமரச ஒப்பந்தத்தின் மூலும் ஆரவ், துர்க்கவ், கிறிசன்ஸ், செங்காலன், வஉட், ரீசின் என்ற கன்ரோன்கள் சம உரிமை பெற்ற கன்ரோன்களாயின. 1815ல் வியன்னா பேராளர் பிரகடனம் சுவிஸக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கிச் சுவிஸின் நடுநிலையை முழமையாக ஐரோப்பிலய அரசுகள் ஏற்று அங்கீகரிக்க இணங்கின. ஆனால் புரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதக் கன்ரோன்களுக்கு இடையே மீண்டும் உள்நாட்டுப் போர் எழுந்தது. 27 நாட்கள் மட்டுமே நிகழ்ந்த இப்போர் இரு மதங்களுக்கும் இடையே உள்ள மனக் கசப்பை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. 100 பேரளவினர் காயத்துக்கும் மரணத்துக்கும் உள்ளானவருள் அடங்குவர். நல்ல வேளையாக இதுவே இடம்பெற்ற கடைசிப் போராக அமைந்து விட்டது. இத்தனை ஆட்சியாளரின் ஆக்கிரமிப்புகள் அதிகாரப் போர்கள் இடப் பெயர்வுகள் சுவிஸ் மக்களுக்கு ஒரு பேருண்மையை விளங்க வைத்தது. அது தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்ற சம நோக்குச் சிந்தனையாகும் . இதனை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்க அரசமைப்பு விதிகளிலும் பிரெஞ்சு அரசமைப்பு விதிகளிலும் தமது பட்டறிவின் அடிப் படையிலும் தெரிந்து கொண்ட பல நல்ல விடையங்களை உள்ளடக்கும் வகையில் சுவிஸின் அரசமைப்புச் சட்டத்தை வகுக்கத் தொடங்கினர்.
1847ல் உருவாக்கப் பட்ட அரசமைப்பு சட்டம் மத்தியில் ஒரு கூட்டாட்சியும் கன்ரோன்களுக்கு முழு இறையாண்மை இதன் மூலம் மக்களே நேரடியாக ஆட்சியில் பங்கு பற்றும் உரிமை உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் சுவிஸின் அரசமைப்புச் சட்டம் எந்நேரமும் எவராலும் மாற்றத்துக்கு உள்ளாக்கப் படும் நெகிழ்வுத் தன்மை உள்ளதாகக் காணப் படுகிறது. இலங்கை அரசமைப்புச் சட்டம் ஆரிய சிங்கள பௌத்த வெறியோடு 3ல் 2 பங்குப் பெரும்பான்மை கொண்ட ஆளும் கட்சியால் அதுவும் ஆரிய சிங்கள பௌத்த வெறியூட்டித் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியால் மட்டுமே இனங்கள் மதங்கள் கலாச்சாரங்களுக்குப் பாதகமான மாற்றங்களே இடம் பெறும். சுவிஸ் அரசமைப்புச் சட்டத்தின் அறிமுக விதியில் இப்படி குறிப்பிடப் பட்டள்ளது. இறைவனின் நாமத்தால் கன்ரோன்களும்; சுவிஸ் மக்களும் இறைவனின் படைப்பு களுக்கான எமது பொறுப்பை மனதிற் கொண்டும், எமது நம்பிக்கையை உறுதிப் படுத்தும் வகையில் வேற்றுமைகளுடன் ஒற்றுமையாய் வாழவும் , பொதுவான எமது சாதனைகளையும் எமது சந்ததியின் வருங்காலத்துக்கான எமது பொறுப்புக்களை மனதிற் கொண்டும் சுதந்திரம் என்பது ஒருவன் தனது சுதந்திரத்தைப் பயன் படுத்து பவனுக்கே என்ற முடிவிலும் , மக்களின் பலம் என்பது பவீனமானவரின் நல்வாழ்வின் தன்மையால் அளவிடப் படுகிறது என்பதால் பின் வரும் அரசமைப்புச் சட்டத்தை ஏற்றக் கொள்கிறோம். இலங்கை அரசுகள் கடந்த 30 வருடங்களாகத் தன் மக்கள் மீதே போர் தொடுத்தும் விமானக் குண்டுகள் எறிகணைகள் மூலம் கொன்றொழித்தும் புத்த பிரானின் நாமத்தால் ஆட்சி நடத்துகிறது. இத்தகைய இறைபக்தியும் மனித நேயமும் சுதந்திர வேட்கையும் சமூக நல சிந்தனைகளும் இலங்கை அல்லது இந்திய அரசமைப்புச் சட்டங்களில் காண முடியாத ஒன்றாகும். அடுத்து அரசமைப்பில் காணப் படும் அரசமைப்பின் நோக்கம் இப்படிக் கூறுகிறது. சுவிஸ் கூட்டமைப்பு மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பேணி நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும். அது பொதுநலன், தொடர்ச்சியான அபிவிருத்தி, உள்ளக ஒருமைப்பாடு, நாட்டின் பன்முகப் பண்பாடு என்பவற்ற வளர்க்கும். அது அதன் எல்லாக் குடிமக்களுக்கும் முடிந்த அளவு அதி உயர்ந்த பட்ச சம சந்தரர்ப்பத்தை உறுதிப் படுத்து கிறது. இயற்கை வளங்களை நீண்ட காலம் பாதுகாக்கவும் சர்வதேச அளவில் நீதியும் அமைதியும் நிலவப் பாடுபடும். இத்துடன் இலங்கை இந்திய அரசமைப்பு விதிகள் ஒப்பிடக் கூடியனவாகக் காணப்படினும் அவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் போன்ற நிலையே அங்குள்ள அன்றாடச் செய்திகள் புலப் படுத்துகின்றன. உணவு மருந்துத் தடைகளை விதித்து தனது மக்களை பசி பட்டினி நோய்களால் வருத்துவது இலங்கையின் ஆட்சி முறை. விதி 3ன் படி கன்ரோன்கள் கூட்டாட்சியின் அமைப்பு விதிகளை மீறாத வரை தன்னாதிக்க இறைமை கொண்டவையாயும் கூட்டாட்சிக்கு வழங்கப்படாத எல்லா உரிமைகளையும் கொண்டிருக்கும். இங்கே மத்தியில் உள்ள அரசு கன்ரோன்களின் கூட்டாட்சி அல்லாது இந்திய மத்திய அரசு போன்ற எதேச்சாதிகார அமைப்போ அல்லது கொழும்பில் ஆட்சி செய்யும் ஒற்றையாட்சி போன்றதோ அல்ல. மத்தியில் இயங்கும் சுவிஸ் கூட்டாட்சி , மற்றும் மாநிலங்கள் அரசுகளை; சட்டங்களுக்குக் கட்டுப் படவும் சமநோக்கு நல்ணெணம்,சர்வதேசச் சட்டங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் தனி நபரின் பொறுப்புணர்வும் கொண்டு இயங்கவேண்டும் எனவும் மக்கள் ஆணை சொல்கிறது. 1999ன் உரிமைகள் சட்டம் பல அடிப்படை மனித உரிமைகளையும் சுவிஸ் கூட்டாட்சி உச்ச நீதிமன்ற, ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்ற வழக்குகளின் தீர்ப்புகளையும் மற்றும் 1974 ன் ஐரோப்பிய மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ள வற்றையும் மத்திய பாராளுமன்றத்தினால் ஒருங்கிணைத்து நிறைவேற்றப் பட்டது. சுவிஸின் தேசிய மொழிகளாக அந்நாட்டு மக்களால் பேசப்படும் யேர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ரோமானிய மொழிகள் அரசமைப்புச் சட்ட விதி 4ல் உறுதிப்படுத்தப் பட்டு மொழிகளின் பட்டிலில் உள்ளன. இதில் எந்த மொழி பேசுவோர் எத்தனை விகிதம் என்ற பாகுபாடு இல்லாது எல்லாருக்கும் சம உரிமை அடிப்படையில் சட்டம் அமைந்துள்ளது. இத்தகைய சுதந்திரம் மறுக்கப் பட்டதால் இந்தியாவில் இந்தி எதிர்ப்பு இயக்கங்களும் இலங்கையில் சிங்கள எதிர்ப்பு இயங்கங்களும் நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தடையாக உள்ளதைக் காண முடிகிறது. மக்களுக்குச் சட்டம் ஒழுங்கு நீதியை உத்தரவாதப் படுத்தும் வகையில் விதி 4 அமைக்கப் பட்டுள்ளது முதலாவதாகச் சட்டத்தின் அடிப்படையில் அரசு கட்டுப் படுத்தப் படுகிறது. எந்த அரசுத் தலைவரும் அல்லது அதிகாரியும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயற்பட முடியாது என இப்பகுதி கட்டுப்படுத்துகிறது. அரசின் செயற்பாடு பொது நல அக்கரையும் நியாயத் தன்மையும் கொண்டிருத்தல் வேண்டும். அரச நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் நல் எண்ண அடிப்படையில் செயலாற்ற வேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும் சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும். இத்தகைய விதிகளால் தனிமனித நிறுவனங்களும்;, அரசும் சட்டத்துக்குக் கட்டுப்படவும் நாணயத்துடனும் பொது நல நோக்குடனும் நடந்து கொள்ளவும் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். எனவே சுவிஸ் நாடு உலகில் மிகச் சிறியதாகவும் வளங்கள் அதிகம் இல்லாதும் உள்ள நிலையிலும் செல்வந்த நாடுகளின் அணியிலும் உலகின் சிறந்த நகரங்களையும் கொண்டுள்ளது. இதுபோன்ற நிலை இலங்கை இந்திய நாடுகளில் ஏற்பட முடியாத காரணம் சட்டம் ஒழுங்கு நேர்மை அணுவளவும் இல்லாது ஊழல் லஞ்சம் எல்லா மட்டங்களிலும் பல்கிப் பெருகி இருப்பதே காரணமாகும். ஆய்வு: முரசத்திற்காக ஈழப்பிரியன் சுவிஸ் அரசமைப்பின் இன்னும் ஒரு சிறப்பாக இருப்பது தனிமனித மற்றும் சமுதாயப் பொறுப்பு பற்றி விதி 6 ஆகும். இதன் படி ஒவ்வொரு நபருக்கும் தனது சுயமான ஆற்றலை வளப்படுத்தித் தனதும் நாட்டினதும் சமுதாயத்தினதும்; இலட்சியத்தை அடையும்; பொறுப்பு உள்ளது. இலங்கை இந்திய நாடுகளில் தேசத்தையே பட்டா போட்டுப் பணம் கொள்ளை அடிக்கும் குணம் மேலோங்கி இருப்பதற்கு அந்நாட்டில் உள்ள சட்டங்களே பெரிதும் இடமளிக்கின்றன. இலங்கையில் சுனாமி உதவிப் பணத்தைச் சுரண்டியவருக்கு எதிரான வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரிக்கத் தடை உத்தரவு போட்டு நீதியைக் கொன்றது. இந்தியாவில் ராஜீவ் காந்திக்கு எதிரான போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்குகள் போல் எத்தனையோ ஊழல் வழக்குகள் நீதி விசாரணை 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் முடிவுறாமல் இழுபடுவது இந்நாடுகளின் பொறுப்புணர்வுக்கு கண்கண்ட காட்சியாக தெரிகிறது. அடிப்படை உரிமைகள் மனித மாண்பு மதிக்கப்படவும் பாதுகாக்கப் படவும் வேண்டும் என விதி 7 வலியுறுத்துகிறது. மனித மாண்பு பற்றி இலங்கை இந்திய அரசமைப்புச் சட்டங்களில் கூறப் பட்டிருக்கிறதா அல்லது அத்தகைய உணர்வு எங்கேயும் காணப் படுகிறதா என்பதே சிந்திக்க வேண்டியதாக உள்ளது. இன்னும் ஒரு உயர் பண்பாக சமத்துவம் பற்றிய விதி 8 உள்ளது. இதன் படி மனிதர் எல்லாரும் சட்டத்தின் முன்னே சமம் எனப் பார்க்கப் பட வேண்டும். மகிந்தவோ பசிலோ சந்திரிகாவோ ரணிலோ புஞ்சி பண்டாவோ சின்னத்துரையோ சலீமோ ஒரே விதத்தில் விசாரிக்கப் பட்டு நீதி வழங்கப் பட வேண்டும் என்பதே இச்சட்டத்தின் வியாக்கியானம். ஆனால் அப்படி இலங்கை இந்தியாவில் பார்க்கப் படுவதில்லை பார்க்கப்படவும் மாட்டாது. தனிமனித சுதந்திரமும் பாதுகாப்பும் தனிமனித உரிமைகளும்.
எந்த ஒரு நபரும் அவரது பூர்வீகம், சாதி, பால், வயது, மொழி, சமூக நிலை, வாழ்வின் முறை, மதம், தத்துவ மற்றும் அரசியல் நம்பிக்கைகள் , உடல், அல்லது மனக் குறை பாடுகளின் நிமித்தமோ பாரபட்சம் காட்டப்படக் கூடாது. ஓவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கான உரிமை கொண்டுள்ளான். அதனால் மரண தண்டனை தடைசெய்யப் படுகிறது. ஓவ்வொரு மனிதனுக்கும் தனிச் சுதந்திரம் இருக்கிறது. உடல் உள தனித்துவமும் கௌரவமாக நடமாடும் சுதந்திரமும் உண்டு. சித்திரவதை, எந்த வகையிலுமான கொடுமை, மனிதாபிமானம் அற்ற அல்லது சிறுமைப் படுத்தும் தண்டனைகள் தடை செய்யப்படுகின்றன.
குழந்தைகளும் சிறுவர்களும் சிறப்பான பாதுகாப்புக்கும் தனிப் பட்ட கௌரவத்துக்கும் அவர்களின் அபிவிருத்திக்கும் உரித்து உடையவர்கள்.
ஓவ்வொரு நபரும் அவரது தனிப் பட்டதும் குடும்ப வாழ்வினதும் கடிதம் தொலைத் தொடர்புகளினதும் இரகசியத்துக்கும் மதிப்புக்கும் உரிமை உள்ளவர். ஓவ்வொரு நபரும் தமது சுய விபரங்களைத் தவறாகப் பயன்படுத்தப் படுவதிலிருந்து பாதுகாக்கும் உரிமை உள்ளவர். திருமணம் செய்யவும் குடும்பமாய் வாழவும்; உரிமைகள் உத்தரவாதப் படுத்துகிறது. நம்பிக்கை மற்றும் மனச்சாட்சித் சுதந்திரங்கள் உத்தரவாதம் உள்ளது. ஒவ்வொருவருக்கும் சுயமாக மத நம்பிக்கையை அல்லது மத நம்பிக்கை இன்மையைத் தெரிவு செய்யவும் அதனைத் தனியாகவோ கூட்டமாகவோ பரப்புரை செய்து மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவும் உரிமை உள்ளது. இஈங்கையில் பித்தர்கள் போன்று புத்தம்தான் ஒரே மதம் என்பது போல் கத்தோலிக்கமோ புரட்டஸ்தாந்தோ என்று பேசவில்லை. ஒவ்வொரு நபரும் ஒரு மதக் கூட்டத்தைச் சுயமாகத் தெரிவு செய்யவும் மதஅறிவு பெறவும் உரிமை உடையவர். எவரும் எந்த ஒரு மதத்திலும் இணையவோ, மதக் கடமை புரியவோ அல்லது மதக் கல்வி பெறவோ கட்டாயப் படுத்தப் படமுடியாது.
அரசமைப்பு விதி 16ன் படி கருத்துச் சுதந்தழரமும் தகவல் சுதந்தழரமும் உத்தரவாதப் படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் தனது சொந்தக் கருத்தை உரவாக்க, வெளிப்படுத்த, மற்றும் தனது கருத்தைத் தடையின்றிப் பரப்ப உரிமை உண்டு. ஒவ்வொரு நபரும் தகவலைத் தடையின்றிப் பெறவும், பொதுவாகப் பெறக்கூடிய இடங்களிலிருந்து பெறவும், அவற்றைப் பரப்பவும் உரிமை கொண்டுள்ளார். ஊடகச் சுதந்திரம்
மொழிச் சுதந்திரம் உத்தரவாதப் படுத்தப் படுகிறது. இலவச தொடக்கக் கல்விக்கான உரிமை உத்தரவாதப் படுத்தப் படுகிறது. விஞ்ஞான ஆய்வுகளும் விஞ்ஞானக் கற்கையும் உத்தரவாதப் படுத்தப் படுகிறது. கலைச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், கூட்டங்களைக் கூட்டவும், கூட்டங்களில் பங்கு பற்ற அல்லது பங்கு பற்றாது விடும் சுதந்திரம் உள்ளது. எவரும் எந்த அமைப்புடன் சேரவோ அல்லது சேர்க்கப் படவோ நிர்ப்பந்திக்கப் படமுடியாது. சுவிஸ் பிரஜை நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழ உரிமை உள்ளவர். சுவிஸை விட்டுப் போகவும் திரும்ப வரவும் உரிமை உண்டு. சுவிஸ் பிரசையை நாட்டை விட்டு வெளிறே;ற முடியாது. அவரது சம்மதம் இல்லாது வேறு ஒரு நாட்டிடம் ஒப்புவிக்கவும் முடியாது. அகதிகளை தண்டனைக்குள்ளாக்கும் நிலையிலுள்ள நாட்டுக்குக் கட்டாயப் படுத்தி அனுப்பக்கூடாது. எவரும் சித்திரவதைக்கோ துன்புறுத்தலுக்கோ மனிதாபிமானம் அற்ற மிரட்டல் அல்லது தண்டனைக்கு உட்படுத்தக் கூடிய எந்த நாட்டுக்கும் பலவந்தமாக அனுப்பக் கூடாது. சொத்துச் சுதந்திரம் உத்தரவாதப் படுத்தப்படுகிறது. சொத்துக்களை சவிகாரப் படுத்தும் பொழுதும் தடைப்படுத்தும் பொழுதும் அதற்கான இழப்பீடு முழுமையாக கொடுபடவேண்டும். கப்பம் கொள்ளை அடிக்க வழிசெய்யவில்லை. பொருளாதாரச் சுதந்திரம் உத்தரவாதப் படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக இது சுதந்திரமான தொழிலைத் தெரிவு செய்ய, தனியான பொருளாதார நடவடிக்கைகளுக்கான தேடல் சுதந்திரமும் உள்ளது. பொது நடைமுறைச் சுதந்திரமாக பின்வரும் உத்தரவாதங்கள் பெருமைப் பட வைக்கின்றன. நீதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஒவ்வொரு நபருக்கும் சமமான நீதியான வரவேற்பும் நியாயமான கால எல்லைக்குள் தீர்வும் பெறும் உரிமை உள்ளது. இலங்கை இந்தியச் சிறைகள் தடுப்பு முகாம்களில் பயங்கரவாத தடைச் சட்டம் பொடாச் சட்டங்களின் கீழ் ஆயட்காலமாய் அவதிப் படுபவரே இருக்கின்றனரே !
சம்பந்தப் பட்ட தரப்பினரின் கூற்றுக்கள் கேட்கப்படும் உரிமை பெற்றுள்ளார்கள். மேற் தரப் பட்டவை மிகக் குறைவான முக்கியமான சுவிஸ் அரசமைப்புச் சட்ட விதிகள் பற்றியவையே. இவற்றைப் பார்த்த பின்னரும் இலங்கையோ அல்லது இந்தியா போன்ற பத்தாம்பசலி நாடுகளோ சுவிஸ் நாட்டின் அரசமைப்பை ஒத்த ஒரு அரசியல் தீர்வை வழங்கவோ அது பற்றி விவாதிக்கவோமுன் வரும் என நினைப்பது எத்தகைய அறிவீனம். இத்தகைய அரசியல் மனித நேய அறிவும் பண்பும் இருக்குமானால் காஷ்மீரப் பிரச்சனையோ காவேரிப் பிரச்சனையோ இந்தியாவில் தோன்றியிருக்க முடியுமா ? அல்லது இந்திய மத்திய ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சி நினைத்தபோது நினைத்தபடி மாநில அரசுகளை கலைத்துக் கவர்னர் ஆட்சியைத் தமது கட்சிக் கட்டுப் பாட்டில் நடக்கும் ஒருவரைக் கொண்டு மாநில அரசை நடத்த முடியுமா ? இவற்றை அறிந்து கொண்ட பின்னரும் இந்தியாவின் மத்திய மாநில சுயாட்சி எமக்குச் சிறந்தது எனப் பேசிப் பொய்ப் பிரசாரத்தால் தமிழீழ மக்களை எண்ணெய்ச் சட்டியிலிருந்து எரியும் நெருப்புக்குள் தள்ள நினைக்கும் புத்தி ஜீவிகளும் ஆய்வாளர்களும் தமிழினத் துரோகிகள் அல்லாது தலைவர்களாகவா இருப்பர் ? இத்தகையோரைக் கொண்டு மகிந்தரும் இந்தியாவும் தமிழினத்துக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்றால் குண்டுகள் போட்டு பகுத்தறிவு பெற்ற தமிழரையும் புலிகளையும் கொன்றபின்தானே சாத்திமாகும் ? எனவேதான் மகிந்தருடன் இந்தியாவும் கைகோர்த்து எம்மினத்தை அழிக்கிறது. எனவே எமது இனத்தின் எதிரியாக இரு நாடுகளுமே பார்க்கப்பட வேண்டி உள்ளது. உணர்வோம் உறுதியுடன் உழைத்து முன்னேறுவோம். கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





ஆகஸ்ட் 1ல் சுவிஸ்நாட்டில் மக்களிள் வீடுகள் தோறும் சிவப்பு நிறத்தில் வெள்ளைச் சிலுவை பொறித்த சுவிஸின் தேசியக் கொடி பட்டொளி வீசிக் காட்சி தரும். அன்றையை தினத்தில் ஒவ்வொரு கிராம, மற்றும் நகர ஆட்சிப் பகுதிகளிலும் பல இலட்சம் பிறாங்குகள் செலவில் இரவு சுமார் 9.30 அளவில் இடம் பெறும் பெரும் வாண வேடிக்கைகளை எவரும் பார்த்து மகிழலாம். இத்தகைய மகிழ்ச்சிக்கு சுவிஸ் நாடு பெருமைப்படும் காரணியாக இருப்பது அதன் இணைப்பாட்சி முறையிலான கன்ரோன்கள் அடிப்படையில் அமைந்த பல்லின மொழி ,மத ,பிரதேச, மக்கள், தமது வேறுபாடுகளின் மத்தியில் ஒன்றிணைந்து ஆட்சி நடத்தும் ,சமஷ்டி ஆட்சி அரசமைப்பு முறையாகும்.
கொண்ட மக்களாட்சியும் 27 நாட்களே நடைபெற்ற உள்ளாட்சிப் போரின் விளைவாக உருவாக்கப் பட்டது. 1874ல் விரிவான மாற்றங்களுடன் கூடிய மத்திய அரசிடம் பாதுகாப்பு, நீதி பரிபாலனம், வர்த்தகம் என்பனவும், கன்ரோன்களிடம் இவை தவிர்ந்த ஏனைய விடையங்களையும் ஒப்படைத்தது. இதில் மிகப் பெரும் சிறப்பாகவும் உலகில் கிரேக்கத்திலும் , இராசராசன் காலத்தில் தமிழ் நாட்டிலும் இடம்பெற்று வந்த மக்களால் நேரடியாக ஆளப்படும் முறையான நேரடி மக்களாட்சி முறை சுவிஸின் அரசமைப்பிலும் புகுத்தப் பட்டது. அதாவது ஏதாவது ஒரு விடையம் பற்றி ஒரு இலட்சம் மக்கள் கருத்தை மத்திய அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என எவராது விரும்பினால் குறிப்பிட்ட தொகையினர் அதனை எழுத்து மூலம் மத்திய அரசு கவனத்தில் எடுக்கக் கோரிக்கை விடுத்தால் அதனை மத்திய அரசு ஒரு பொது மக்கள் வாக்கெடுப்பு மூலம் மக்கள் அங்கீகாரம் பெற்று சட்டமாக்க வேண்டும்.

