20. November 2008 14:51
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
4. October 2008 12:47
3. October 2008 18:45
11. October 2008 23:48
27. August 2008 15:01
கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப் போகிறேன்-ஜெயலலிதா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
1. August 2008 08:41
jeya.jpgகச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டமையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்

1974ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு கச்சதீவை இலங்கையிடம் ஒப்படைத்ததை எதிர்த்து முன்னாள் முதல்வர் மற்றும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற வகையில் தான் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுக்கப்பட்டே ஆக வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெருபாரி யூனியனையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் மற்றொரு நாட்டிடம் வழங்க அரசியல் சட்டத்தின் 368வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்டதையும் ஜெயலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், கச்சதீவு விடயத்தில் அவ்வாறான எந்த ஒப்புதலையும் இந்திரா காந்தியும், அடுத்து வந்த அரசாங்கங்களும் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கச்சதீவு ஒப்பந்தம் முறையானது தானா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் அணுக வேண்டும் எனவும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை பிரதமர் செய்யத்தவறினால், தான் நீதிமன்றத்தை நாடுவேன் எனவும்,   உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகக் கோரி, அல்லது ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடருவேன் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கச்சதீவு கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும்வகையில் இலங்கையுடன் இந்தியா புரிந்துணர்வு உடன்பாடொன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவம், அது குறித்த நகல் வரைபொன்றை இலங்கை அரசாங்கத்தின் பரிசீலனைக்கு இந்தியா அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கச்சதீவுக்கருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சுமார் 80 மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நேற்றுக் காலை தாக்குதல் நடாத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க, இது தொர்பாக எந்தவித தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

 
< முந்தைய   அடுத்த >