| தமிழக மக்களை எங்கள் உடன்பிறப்புகளாகவே கருதுகிறோம் |
|
|
| வா.கி.குமார் | |
| 1. August 2008 16:04 | |
|
தமிழக மக்களை எங்கள் சகோதரர்களாகவே நாங்கள் கருதுகிறோம்.நான் பொலிஸில் பிடிப்பட்டாலும் விடுதலைப்புலிகளுக்கு எந்த பின்னடைவும் இல்லை. விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வீழ்ச்சியடைந்தாலும் அந்த இயக்கம் வீழ்ச்சியடையாது என தெரிவித்துள்ளார் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினரென தெரிவிக்கப்படும் ஒருவர் என செய்திவெளியிட்டுள்ளது இந்திய இணையத்தளம்.
கைதானார் நேற்று முன்தினம் இரவு தம்பி அண்ணா வளசரவாக்கத்துக்கு வந்தபோது கிï பிரிவு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தமிழகத்திற்கு வந்தது ஏன்? என்பது குறித்து தம்பி அண்ணா திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:- நான் விடுதலைப்புலி இயக்கத்தில் உணர்வுபூர்வமான உறுப்பினராக என்னுடைய 28-வது வயதில் சேர்ந்தேன். அந்த இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் கடல்புலிகள் பிரிவு தலைவர் சூசை எனக்கு நெருங்கிய நண்பர். அவர் தான் எனக்கு தலைவர். அவருடைய கட்டுப்பாட்டில்தான் நான் இருந்தேன். நான் ஏற்கனவே 2006-ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தேன். அப்போது சுமார் ஒரு மாத காலம் தமிழகத்தில் தங்கியிருந்து சென்றேன். தமிழகத்திலிருந்து பொருட்களை கடத்தி செல்வதற்கு நல்ல படகுகள் தேவைப்பட்டது. அந்த படகுகளை தமிழகத்தில் இருந்து வாங்கி இலங்கைக்கு கொண்டு செல்வதற்காகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் 2006-ல் தமிழகம் வந்தேன். என்னுடைய ஏற்பாட்டின்படி ஒரு படகை இலங்கைக்கு கடத்தி சென்றுவிட்டோம். சண்டைபோட்டேன் நான் விடுதலைப்புலி இயக்கத்தில் கடல் புலிகள் பிரிவில் சாதாரண போர் வீரனாக முதலில் பணியாற்றினேன். அப்போது இலங்கை கடற்படையினரோடு நேரடியாக பலமுறை சண்டை போட்டேன். விடுதலைப்புலி இயக்கத்தில் கடும் கட்டுப்பாடுகள் இருந்தாலும் மனைவி, குழந்தைகளோடு தனியாக குடும்பம் நடத்தி கொள்ளலாம். மத நம்பிக்கை வைப்பதிலும் தடையில்லை. குழந்தைகளை படிக்க வைப்பது முதல், குடும்பம் நடத்துவதற்கான அனைத்து செலவுகளையும் விடுதலைப்புலி இயக்கம் ஏற்றுக்கொள்ளும். எனக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் இன்னொரு மகனும் உள்ளனர். கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ள நான், தமிழகத்திற்கு வரும்போது வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். அதை ஒரு வேண்டுதலாகவும் வைத்திருந்தேன். மொட்டை போட்டேன் தற்போது தஞ்சாவூர் சென்றிருந்தபோது வேளாங்கண்ணி சென்று மாதாவை தரிசித்தேன். அங்கு தலையில் மொட்டை போட்டுக்கொண்டேன். எனது நீண்டகால வேண்டுதல் இதன் மூலம் நிறைவேறியுள்ளது. தமிழக மக்களை எங்கள் சகோதரர்களாகவே நாங்கள் கருதுகிறோம். நான் போலீசில் பிடிபட்டதால் விடுதலைப்புலி இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் இல்லை. என்னுடைய இடத்தில் இப்போது வேறொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். எனவே, விடுதலைப்புலிகள் இயக்கம் தலைவர்கள் வீழ்ச்சி அடைந்தாலும் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது. இவ்வாறு தம்பி அண்ணா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஜெயிலில் அடைப்பு தம்பி அண்ணா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். காவலில் விசாரிக்கும்போது அவரிடமிருந்து மேலும் திடுக்கிடும் தகவல்களை பெறலாம் என்று கிï பிரிவு போலீசார் எதிர்பார்ப்புடன் உள்ளனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|






