20. November 2008 13:46
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
12. October 2008 00:13
4. October 2008 12:47
27. August 2008 15:01
13. October 2008 13:01
`மர்ம' கடிதம் :அரசு கேபிள் டி.வி.க்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
2. August 2008 11:43

tamilnau_police.jpgஅரசு கேபிள் டி.வி. திட்டத்தை கைவிடாவிட்டால் விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என்று விமான நிலையத்துக்கு கடிதம் வந்தது. இந்த மர்ம கடிதம் எழுதிய ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

`மர்ம' கடிதம்

சென்னையை அடுத்த மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு நேற்று காலை ஒரு கடிதம் வந்தது. அப்போது பணியில் இருந்த விமான நிலைய மேலாளர் மாதவன்ராவ் அந்த கடிதத்தை படித்தார்.

அதில், தமிழக அரசு கொண்டு வந்து உள்ள கேபிள் டி.வி. திட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் 2-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என எழுதப்பட்டு இருந்தது. உடனே விமான நிலைய போலீசுக்கு தகவல் தரப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவின் பேரில் பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜ×லு, மீனம்பாக்கம் உதவி கமிஷனர் குப்புசாமி, விமான நிலைய இன்ஸ்பெக்டர் முகிலன் ஆகியோர் தலைமையில் கடிதம் பற்றி விசாரித்தனர்.

தீவிர விசாரணை

அப்போது சென்னை அண்ணா நகரில் உள்ள அஞ்சல் நிலையத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டதை கண்டு பிடித்தனர். இந்த கடிதம் அனுப்பிய நபர் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் பாதுகாப்புகளை பலப்படுத்துவது பற்றி பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. இந்த பாதுகாப்பை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக ஒரு சூட்கேஸ் இருந்தது. அந்த சூட்கேஸ் பற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். சூட்கேஸ் பற்றி மைக்கில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் சூட்கேசை எடுக்க வராததால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.

மோப்ப நாய்

உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தரப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வந்ததை கண்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் அருகில் ஓட்டலில் இருந்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் சூட்கேசை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை போட்டனர். சூட்கேசில் இருந்து டிக்... டிக்... என சத்தம் வந்தது. இதனால் அந்த பகுதியில் பீதி அதிகமானது. உடனே சூட்கேசை பலத்த பாதுகாப்புடன் திறந்து பார்த்தனர்.

அதில் துணிகள் இருந்தன. மேலும் சோதனை போட்டபோது ஒரு கைக்கடிகாரம் இருந்தது. இதில் இருந்து தான் சத்தம் வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கைக்கெடிகாரத்தில் வெடிகுண்டு உள்ளதா என்பதை கண்டு அறிய பாதுகாக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேர சோதனைக்கு பின் வெடிகுண்டு உள்ளதா என கண்டு அறியப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 
< முந்தைய   அடுத்த >