| மன்மோகன் -கொய்ராலா சந்திப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 3. August 2008 19:13 | |
|
அப்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் நேபாள அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடந்தும் இதுவரை ஜனநாயக முறையிலான அரசு பதவியேற்கவில்லை. 250 ஆண்டுகளுக்கும் மேலான மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டிய அந்நாட்டு அரசியல் கட்சிகள், ஜனநாயக அரசை அமைப்பதில் இழுபறி நிலையை கொண்டுள்ளன. இதுகுறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். நேபாளத்தில் ஜனநாயக அரசு அமைய என்றும் இந்தியா உதவிடும் என்று மன்மோகன் சிங் உறுதியளித்தார். ஜனநாயக அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை போக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கொய்ராலாவிடம் மன்மோகன் கேட்டு கொண்டார். இருதரப்பு உறவுகள்... இந்தியா- நேபாள நாடுகளிடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர். தற்போது இருநாடுகளுக்கும் இடையே இணக்கமான உறவு இருப்பதாக இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். மாலத்தீவு அதிபர் சந்திப்பு... இதையடுத்து மன்மோகன் சிங்கை மாலத்தீவுகளின் அதிபர் மம்மூன் அப்துல் கையூம் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|






சார்க் மாநாட்டில் பங்கேற்க இலங்கைத் தலைநகர் கொழும்பு வந்துள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், நேபாள நாட்டின் இடைக்கால பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர்.
