| தமிழக மீனவர்களை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் கி.வீரமணி தலைமையில் நடந்தது |
|
|
| வா.கி.குமார் | |
| 5. August 2008 07:42 | |
|
வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வீரமணி பேசும்போதும், "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்திட தி.மு.க. அரசு ஓரளவுக்கு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், மத்திய அரசாங்கம் இந்த பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தவில்லை. கச்சத்தீவை தாரைவார்த்தது தவறு. அதை மீட்க வேண்டும். இதுதொடர்பாக திராவிடர் கழகம் தொடுத்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் 11 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம். மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும்'' என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக பொருளாளர் சாமிதுரை, பொது செயலாளர்கள் கலி.பூங்குன்றன், அறிவுக்கரசு, தலைமை செயற்குழு உறுப்பினர் பார்வதி, வடசென்னை மாவட்ட தலைவர் குணசீலன், தென்சென்னை மாவட்ட தலைவர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும், ஈழத் தமிழர்களை பாதுகாக்கக் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
