| கச்சத்தீவு விவகாரம்: தமிழக காங்கிரஸ் மெளனம் |
|
|
| வா.கி.குமார் | |
| 5. August 2008 19:53 | |
|
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: "இலங்கை அரசுடனான கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது போன்ற பிரச்னையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை, இப்பிரச்னை குறித்து கட்சியின் செயற்குழு விவாதித்து தலைமைக்கு பரிந்துரைக்கும். இதன் பின்னரே முடிவு எடுக்கப்படும். மீனவர் பிரச்னையில் தீர்வு: "சார்க்' மாநாட்டின்போது மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்ற பேச்சில், தமிழக மீனவர் பிரச்னையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதன்படி மீனவர் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படும்; மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, இலங்கையின் கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படும். இதற்கு இலங்கை அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. இனி, தமிழக மீனவர்களுக்கு பிரச்னை ஏதும் நேராது. இது குறித்து பிரணாப் முகர்ஜி எனக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு கிருஷ்ணகிரி பகுதியில் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த சில அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இது குறித்து முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தப்படும். செயற்குழு, பொதுக்குழு: காங்கிரஸ் கூட்டணி அரசின் சாதனைகள், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தால் ஏற்படும் நன்மை ஆகியன குறித்து மக்களிடம் பிரசாரம் செய்யப்படும். இதற்காக சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் வகையில் 5 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் முகாமில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 200 பேச்சாளர்கள் பங்கேற்பர். இதைத் தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தலா 2 முகாம்கள் நடைபெறும். இம் முகாம்களில் தலா 200 புதிய பேச்சாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். சென்னையில் வரும் ஆகஸ்ட் 9-ல் வெள்ளையனே வெளியேறு இயக்க விழா நடைபெறும். முக்கிய பிரச்னைகள் குறித்து கொள்கை முடிவுகளை எடுக்கும் வகையில், சோனியா காந்தியுடன் பேசி, தமிழக காங்கிரஸ் கட்சியில் விரைவில் செயற்குழு, பொதுக்குழு உருவாக்கப்படும். கட்சியில் புது ரத்தம் பாய்ச்சப்படும். காங்கிரஸில் முதல்வர் தலையீடா? தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் முதல்வர் கருணாநிதியின் தலையீடு இருப்பதாகக் கூறுவது சரியல்ல. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள். இதில் சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்றார் தங்கபாலு. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கொள்கை முடிவுகளை கட்சி மேலிடம்தான் எடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்தார்.
