| எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணைகிறார்கள் |
|
|
| வா.கி.குமார் | |
| 6. August 2008 16:59 | |
|
ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி. எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணைகிறார்கள். பேட்டி போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சபாநாயகர் முடிவு நாடாளுமன்ற ம.தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி பாராளுமன்றத்தில் பிரதமர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தோம். மற்ற 2 பேர் அறிவிப்பை மீறி வாக்களித்தனர். எங்களை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோ சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளார். நாங்கள் எடுத்த முடிவை மீறி வாக்களித்த கிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரையும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளோம். இப்போது உள்ள நிலையில் நாடாளுமன்ற கட்சி முடிவுபடி வாக்களிப்பதா? வெளியே உள்ள கட்சி முடிவுபடி வாக்களிப்பதா? இதை தீர்மானிக்க வேண்டியவர் சபாநாயகர். என்னை பொறுத்தவரை எங்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்பார் என்று எதிர்பார்க்கிறோம். தி.மு.க.வில் இணைப்பு நானும், செஞ்சி ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணைவது உறுதியாகி விட்டது. அதற்கான இடம், விழா நடக்கும் தேதி குறித்து நான், செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து விவாதித்து அவர் எடுக்கும் முடிவை ஏற்று அதன்படி அந்த இடத்தில் தி.மு.க.வுடன் இணைவோம். இவ்வாறு அவர் கூறினார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






