21. November 2008 11:29
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
21. August 2008 23:30
29. September 2008 22:52
19. August 2008 23:28
13. October 2008 13:01
இலங்கை கடற்படையைக் கண்டித்து போராட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
6. August 2008 17:40

jayalalitha11.jpgதமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து நாளை மறுநாள் ராமேஸ்வரத்தில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதேநிலை நீடித்தால் ஒரு பெரிய தொழிலை தமிழகம் இழந்துவிடும். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை இனி சகித்துக்கொள்ள முடியாது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் வகையிலான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் அதிமுக மேற்கொள்ளும்.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறியச் செயலைக் கண்டித்தும், மத்திய}மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கவும் வரும் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரம் பாண்டியன் திடலில் காலை 10 மணியளவில் அதிமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 
< முந்தைய   அடுத்த >