| ராஜீவ்காந்தி கொலை வழக்கு விடுதலை செய்யக்கோரி நளினி மனு விசாரணை தள்ளிவைப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 7. August 2008 13:33 | |
|
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நான் 15.9.2006 வரை 15 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துள்ளேன். 10 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தாலே ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை பெற உரிமை உள்ளது. 12.9.2001-ல் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்த 61 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல 14.9.2006 உத்தரவுப்படி 472 ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் எனது கோரிக்கை மனுவை அரசு நிராகரித்து விட்டது. நான் ஜெயிலில் இருந்தே படித்து எம்.சி.ஏ. பட்டப்படிப்பில் முதலாவதாக வெற்றி பெற்றுள்ளேன். எனது கோரிக்கையை நிராகரித்த அரசு உத்தரவை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணி அவகாசம் கேட்டார். இதை ஏற்று வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
