5. December 2008 06:08
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
4. October 2008 12:47
27. August 2008 15:01
29. September 2008 22:52
11. October 2008 23:48
பீஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வெளிநாட்டவர்கள் 4 பேர் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
7. August 2008 14:16

சீன தலைநகர் பீஜிங்கில் 29-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றன. இந்த நிலையில், சீனாவில் இருந்து திபெத்தை விடுவிக்கவேண்டும் என்ற போராட்டம் அந்நாட்டில் வலுத்துள்ளது.

இதனால் எதிர்ப்பாளர்கள் மீது சீனா கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நேற்று ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கும் முக்கிய மைதானமான பறவைக்கூடு ஸ்டேடியம் அருகே வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் `திபெத்தை விடுதலை செய்' என்று எழுதப்பட்ட பேனரை கையில் தாங்கி பிடித்தபடி கோஷமிட்டனர்.

அப்போது, அவர்களில் 2 பேர் அங்கிருந்த மின்சார கம்பம் ஒன்றில் ஏற முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 12 நிமிட போராட்டத்திற்குப்பின் அந்த 4 பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.

 

 
< முந்தைய   அடுத்த >