21. November 2008 15:45
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
29. September 2008 22:52
12. October 2008 00:13
4. October 2008 12:47
21. August 2008 23:30
ஜோர்ஜியாவில் யுத்தநிலைமை பிரகடனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
10. August 2008 20:39

georgia.jpgஜோர்ஜியாவில் இடம்பெற்ற மோதல் நிலைமையை அடுத்து யுத்தநிலையை பிரகடனப்படுத்த அராங்கத்துக்கு அந்த நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜோர்ஜியாவிலே பிரிவினை கோரும் தெற்கு அசட்டியா பிராந்தியத்தின் அருகில் அமைந்துள்ள கோரி நகரில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியமையாலேயே யுத்த நிலைப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

ஜோர்ஜிய இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்ற இராணுவ நிலைகளை இலக்குவைத்து ரஷ்ய விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளன.

எனினும் இதன்போது இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின்போது பொதுமக்கள் ஆயிரத்து ஐந்நுர்று பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களது இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் தெற்கு அசட்டியாவின் தலைநகர் ஸ்கின்வலியை முற்றுகையிட ஜோர்ஜியர்கள் செய்த முயற்சிக்குப் பின்னர் அந்த நகரின் கட்டுப்பாட்டை ரஷ்யத் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஜோர்ஜியாவிலுள்ள  பிரிந்துபோன மற்றுமொரு பிராந்தியமான அப்காஸியாவிலுள்ள பிரிவினைவாதிகள், கொடொரி கோர்ஜிலுள்ள ஜோர்ஜிய இராணுவத்தினர் மீது தாம் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கோர்ஜிலுள்ள ஜோர்ஜியப் படைகளை அங்கிருந்து விரட்டுவதே தமது நோக்கமென அப்காஸியாவில் சுயஅரசாங்கத்தை பிரகடனம் செய்துள்ள ஆட்சியாளர்களின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி புஷ், ஜோர்ஜியாவில் உருவாகியுள்ள நெருக்கடிநிலை குறித்து தான் கவலையடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளார். 

ஜோர்ஜிய நிலப்பரப்பின் ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டுமென்பதுடன்  குண்டுவீசுவதை ரஷ்யா நிறுத்தவேண்டுமெனவும் புஷ் வலியுறுத்தியுள்ளார்.

 

 
< முந்தைய   அடுத்த >