21. November 2008 14:58
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
12. October 2008 00:13
29. September 2008 22:52
3. October 2008 18:45
13. October 2008 13:01
வியத்நாமை புயல் தாக்கியது: 125 பேர் பலி? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. August 2008 20:03

வியத்நாமின் மலைகள் சூழ்ந்த வட பகுதியை ஞாயிற்றுக்கிழமை புயல் தாக்கியது. இதில் குறைந்தது 125 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கமூரி என்று அழைக்கப்படும் என்ற இந்த சூறாவளிப் புயலால் வடக்கு வியத்நாம் பகுதியில் கடும் மழை பெய்தது.

இதனால் ஆங்காங்கே வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கில் பாதுகாப்புப் படையினரும், காவல் துறையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வீடிழந்து தவிப்போருக்கு மருந்து, உணவுப்பொருள், குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிலவரப்படி 86 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 39 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தாக்குவதற்கு முன் இந்த பகுதியில் 2 நாளுக்கு முன்பு மழை தொடங்கியது.

இதனிடையே, வெள்ளம் காரணமாக ஹனோய், லாவ் சாய் இடையே உள்ள ரயில்பாதையில் ரயில் என்ஜின் தலைகுப்புற கவிழ்ந்தது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் ரயில் பாதையையொட்டி உள்ள நெடுஞ்சாலை நிலச்சரிவு காரணமாக ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது.

 
< முந்தைய   அடுத்த >