5. December 2008 06:07
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
4. October 2008 12:47
15. October 2008 12:52
19. August 2008 23:28
13. October 2008 13:01
29. September 2008 22:52
ரஷ்யப் படைகள் ஜோர்ஜியா நோக்கி முன்னேறிச் செல்கின்றன - ரஷ்யா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
12. August 2008 08:44
geor.jpgஜோர்ஜியாவில் இருந்து பிரிந்துள்ள அப்காஸியாப் பகுதியூடாக ரஷ்யப் படைகள் ஜோர்ஜியாவுக்குள் முன்னேறிச் சென்றுள்ளதுடன், மேற்குப்புற நகரான செனெகி நோக்கி முன்னேறியிருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. 

ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற மற்றுமொரு பகுதியான தெற்கு ஒஸெட்டியா மீது புதிய தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்குடன், ஜோர்ஜியப் படைகள் மீண்டும் அணிதிரள்வதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள ஜோர்ஜியப் படைகள் தமது ஆயுதங்களை கைவிட வேண்டுமெனவும் அவ்வாறு இல்லாவிடின் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்நோக்க வேண்டி வருமெனவும் ரஷ்ய இராணுவம் முன்னர் காலக்கெடு விதித்திருந்தது.

இதேவேளை ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற தெற்கு ஒஸெட்டியாவின் தலைநகரான ஸ்கின்வாலி கைப்பற்றப்பட்டதையடுத்து அங்கு, ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.   

எனினும் ரஷ்யா மேன்மேலும், இராணுவத்தினரையும், ஆயுதங்களையும் போர்முனைக்கு அனுப்பிக்கொண்டிருப்பதாகத் பி.பி.சி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஈராக்கிலுள்ள  ஜோர்ஜிய இராணுவத்தினரை ஜோர்ஜியாவுக்கு திருப்பியழைப்பதில், அமெரிக்கா உதவியிருப்பதாக ரஷ்யப் பிரதமர் விளாடிமீர் புட்டின் அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் ஜோர்ஜியப் படையினரை திருப்பியழைக்க தாம் உதவியதை அமெரிக்க இராணுவமும் உறுதிசெய்துள்ளது.
 

 
< முந்தைய   அடுத்த >