| புதிய பிரதமர் யார்? நேபாள நாடாளுமன்றத்தில் ஆக.15-ல் தேர்தல் |
|
|
| வா.கி.குமார் | |
| 12. August 2008 10:17 | |
|
நேபாள புதிய பிரதமரை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (15-ம் தேதி) தேர்ந்தெடுக்கவுள்ளது. நேபாள அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நடந்தது. இதில், மாவோயிஸ்டுகள் அதிக இடங்களை பிடித்து முன்னிலை பெற்றனர். ஆனாலும், அவர்களால் இன்னும் ஆட்சியை அமைக்க முடியவில்லை. பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரதமர் யார் என்பதிலும், அமைச்சர்களின் துறைகளை ஒதுக்குவதிலும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், முன்னதாக அந்நாட்டின் மன்னராட்சி முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில் அதிபராக ராம பரண் யாதவ் பதவியேற்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் முறைப்படி செயல்படாததால் அதை செயல்படுத்தும் தீவிர முயற்சிகளை அதிபர் மேற்கொண்டார். அதன் பயனாக தான் பிரதமர் பதவிக்கு தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. 601 உறுப்பினர்... 601 உறுப்பினர்கள் கொண்ட நேபாள அரசியல் நிர்ணய சபையில் 301 வாக்குகள் பெறும் வேட்பாளர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




