| செக்ஸ் ஆசைக்கு தடை விதித்த கணவர் படுகொலை தம்பியை ஏவி கொன்ற மனைவி கைது |
|
|
| வா.கி.குமார் | |
| 13. August 2008 08:50 | |
|
அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அவருடைய மனைவி நேற்று கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். செக்ஸ் ஆசைக்கு கணவர் தடை விதித்ததால், தம்பியை ஏவி அவரை கொலை செய்ததாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குத்திக்கொலை குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள தென்தாமரைகுளத்தை சேர்ந்தவர் ஜவகர் (வயது 34). குமரி மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி முன்னாள் இணைச்செயலாளரான இவர் கடந்த 10-ந் தேதி இரவு தனது வீட்டின் பின்புறம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசாரின் தீவிர விசாரணையில், ஜவகரின் மனைவி கீதா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கீதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கீதா முன்னுக்குபின் முரணாக பேசி மாட்டிக்கொண்டார். ஜவகரை அவரே ஆள் வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை போலீசில் அவர் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து கீதாவை போலீசார் கைது செய்தனர். பரபரப்பு வாக்குமூலம் இந்த கொலை குறித்து போலீசாரிடம் கீதா வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது சொந்த ஊர் இறச்சகுளம். நான் நாகர்கோவிலில் உள்ள ஒரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வரை படித்துள்ளேன். நான் சிறுமியாக இருந்தபோது என் தந்தை இறந்து விட்டார். இந்த நிலையில் என் தந்தையின் நண்பர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவருக்கும், என் தாயாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதைப்பார்த்து எனக்கு செக்ஸ் ஆசை வளர்ந்தது. இந்த நிலையில் நான் நாகர்கோவிலில் படித்தபோது, தென்தாமரைகுளத்தைச் சேர்ந்த கார் டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் காதலித்தோம். அவரையே நான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 2 பிள்ளைகள் பிறந்தன. எனது செக்ஸ் ஆசையை என் கணவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஜவகர் மீது ஆசை அந்த நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜவகர் என் கண்ணில் பட்டார். அவர் நல்ல வாட்டசாட்டமாக இருப்பார். டிப்-டாப்பாக உடையணிந்து பகட்டாக சுற்றுவார். அவர் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதை அவரிடம் தெரிவித்தேன். என் கணவருக்கு தெரியாமல் அவருடன் உல்லாசம் அனுபவித்தேன். அவர் என்னை மிகவும் அன்பாக வைத்திருந்ததால் கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து ஜவகருடன் சேர்ந்து வாழ சென்று விட்டேன். நாங்கள் அதே ஊரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தினோம். ஜவகர் மூலம் எனக்கு 2 குழந்தைகள் பிறந்தன. தொடக்கத்தில் என்னை நன்றாக வைத்திருந்த ஜவகர், போகப்போக குடிபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார். அத்துடன் என்னையும் கவனிக்கவில்லை. அவர் வேலைக்கு செல்லாததால் குடும்பம் வறுமைக்கு சென்றது. இதனால் நான் வேலைக்கு சென்றேன். நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் சேர்ந்தேன். பிரமுகர்களுடன் அறிமுகம் வேலைக்கு செல்லும்போது எனக்கு பலருடன் தொடர்பு ஏற்பட்டது. நாகர்கோவிலில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கெல்லாம் அறிமுகம் ஆனேன். அவர்களுடன் நான் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொண்டேன். என்னை அனுபவித்தவர்கள் எனக்கு அதிகமாக பணம் தந்தனர். இதனால் தினமும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என வீட்டுக்கு கொண்டு செல்வேன். நான் வீட்டுக்கு தினமும் அதிக பணம் சம்பாதித்து சென்றது ஜவகருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவரது அனைத்து செலவுகளுக்கும் எனது பணம் தேவைப்பட்டதால் என்னை கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் போகப்போக அவர் சுதாரித்தார். என்னை கண்டிகக தொடங்கினார். வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தார். தீர்த்துக்கட்ட முடிவு என்னால் வெளியே செல்லாமல் இருக்க முடியவில்லை. எனவே அதற்கு தடையாக இருக்கும் கணவரை தீர்த்துக் கட்டலாம் என்று முடிவு செய்தேன். இதற்கு என் தம்பி செந்தில்குமாரை பயன்படுத்தவும் முடிவு எடுத்தேன். அவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. அழுது நடித்தேன் அவனிடம் சென்று, "என்னை என் கணவர் விபசாரம் செய்ய வற்புறுத்துகிறார்'' என்று பொய் சொன்னேன். நான் அழுது நடித்ததை அவன் நம்பிவிட்டான். உடனே அவன் "கொஞ்சநாள் பொறு, நான் அவனை தீர்த்துக் கட்டி விடுகிறேன்'' என்று எனக்கு ஆறுதல் கூறினான். அதன்படி, செந்தில்குமார் கடந்த 10-ந் தேதி மாலை அவனுடைய நண்பரை அழைத்துக்கொண்டு, எனது வீட்டுக்கு வந்தான். அவர்கள் 2 பேரும் வீட்டின் பின்புறம் ஜவகருடன் அமர்ந்து மது அருந்தினார்கள். ஜவகர் நல்ல போதையில் இருந்தார். நள்ளிரவு நேரத்தில் செந்தில்குமாரும், அவருடைய நண்பரும் சேர்ந்து, ஜவகரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு ஓடி விட்டனர். ஜவகர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். இதைப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் சொன்னார். நான் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தேன். யாரோ கொலை செய்து விட்டனர் என்று போலீசாரிடம் சொன்னேன். ஆனால் போலீசார் உண்மையை கண்டுபிடித்து என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு கீதா அந்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது. 15 நாள் காவல் கைது செய்யப்பட்ட கீதா, நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள குற்றவியல் மாஜிஸ்திரேட்டு 3-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கீதா, போலீஸ் காரில் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறப்பு ஜெயிலில் அடைக்கப்பட்டார். கொலையில் தொடர்புடைய செந்தில்குமாரையும், அவருடைய நண்பரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






