| ஈரானில் கடத்தப்பட்ட 2 போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் |
|
|
| வா.கி.குமார் | |
| 13. August 2008 08:55 | |
|
ஈரான் நாட்டில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், சன்னி முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும் வசித்து வருகிறார்கள். சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் கடந்த ஜுன் மாதம் 16 போலீஸ்காரர்களை கடத்தி சென்றனர். அவர்களில் 4 பேரை அவர்கள் ஏற்கனவே கொன்றுவிட்டனர். நேற்று மீண்டும் 2 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். அதோடு ராணுவ வீரர்கள் 3 பேரையும் கடத்திச் சென்றனர். ராணுவ மேஜர், கர்னல் உள்பட 3 பேர் கடத்தப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் ஜ×ன்டொல்லா (கடவுளின் வீரர்கள்) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே செயல்பட்டு வருகிறார்கள்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





