| சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் |
|
|
| வா.கி.குமார் | |
| 13. August 2008 10:12 | |
|
வெடிகுண்டு மிரட்டல் சென்னையில் நேற்று காலையில் 3 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து டெலிபோன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள(பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே) செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று காலை 8.15 மணி அளவில் மர்ம டெலிபோன் ஒன்று வந்தது. டெலிபோனில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சற்று நேரத்தில் வெடித்து சிதற போகிறது என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார். உடனடியாக துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் ராஜாமணி ஆகியோர் தலைமையில் போலீஸ் படையினர் சென்று பள்ளியில் தீவிர சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் 32511312 என்ற டெலிபோன் எண்ணில் இருந்து மிரட்டல் நபர் பேசியது கண்டறியப்பட்டது. மாணவன் ஒருவன் போனில் பேசி வெடிகுண்டு புரளியை கிளப்பியதாக போலீஸ் விசாரணையில் தெரியந்தது. அந்த மாணவனை பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர். 2-வது மிரட்டல் அடுத்து காலை 9.30 மணி அளவில் சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் சீனிவாச அவென்ï ரோட்டில் உள்ள ராஜாமுத்தையா மேல்நிலைப்பள்ளிக்கும் மர்ம நபர் ஒருவர் டெலிபோனில் பேசி வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த பள்ளியிலும் துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோர் தலைமையில் போலீஸ் படையினர் சென்று சோதனை நடத்தினார்கள். அங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று கண்டறியப்பட்டது. இந்த பள்ளிக்கு 32412724 என்ற டெலிபோன் எண்ணிலிருந்து மிரட்டல் நபர் பேசியுள்ளார். அந்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3-வது சம்பவம் 3-வதாக காலை 10.30 மணி அளவில் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம நபர் ஒருவர் டெலிபோனில் பேசினார். அந்த பள்ளியிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த 3 வெடிகுண்டு சம்பவங்களால் சென்னை நகர போலீஸ் வட்டாரம் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




சென்னையில் நேற்று 3 பள்ளிகளுக்கு டெலிபோன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீஸ் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
