21. November 2008 15:18
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
12. October 2008 00:13
27. August 2008 15:01
11. October 2008 23:48
13. October 2008 13:01
பாகிஸ்தான் ஜனாதிபதி பதவி விலகவுள்ளார் - ‘வக்த் நாளிதழ்’ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
13. August 2008 20:00
musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரப் சுதந்திர தினத்துக்கு முன்னர் பதவி விலகுவாரென பாகிஸ்தானின் நாளிதழான ‘வக்த்’செய்திவெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதிப் பதவியிலிருந்து பர்வேஷ் முஷாரப்பை நீக்குவதற்கான முயற்சிகளில் ஆளும் கூட்டணியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த நிலையில் அடுத்த வாரம் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளதாக 'வக்த்' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

எனினும் நேற்றுக் கொண்டுவரப்படவிருந்த இந்தத் தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் 'வக்த்' நாளிதழ் கூறியுள்ளது.

பர்வேஷ் முஷாரப் இராஜினாமா செய்த பின்னர் எந்தவித பிரச்சினையும் ஏற்படாதென பாகிஸ்தான் மக்கள் கட்சித் தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் 'வக்த்' செய்தி தெரிவித்துள்ளது.

இதேவேளை இராஜினாமா செய்வதற்கு முன்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றும் வாய்ப்பையும் முஷாரப் கோரியுள்ளதாகவும் அந்த நாளிதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 பாகிஸ்தானிலுள்ள நான்கு மாகாணங்களில் இரண்டு சட்டசபைகளில் முஷாரப் பதவி விலக வேண்டுமெனக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 
< முந்தைய   அடுத்த >