| விலகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தீவிரமாக பணியாற்ற முடியாது |
|
|
| வா.கி.குமார் | |
| 14. August 2008 06:49 | |
|
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இனி என்னால் தீவிரமாக செயல்பட முடியாது, இப்போதைக்கு கட்சியில் இருந்து விலகும் எண்ணமும் இல்லை என்று செல்வம் எம்.எல்.ஏ. கூறினார். கருத்து வேறுபாடு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும், கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்துவரும் செல்வம் என்கிற செல்வப் பெருந்தகைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு திருமண விழாவில் செல்வத்தை விமர்சித்து திருமாவளவனே பேசினார். இந்த நிலையில் செல்வம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து செல்வம் எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- பணியாற்ற முடியாது விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட கூட்டங்களில் என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். கட்சியின் தலைவரான திருமாவளவன் இதனை கண்டிக்கவில்லை. இதன்மூலம் தலைமையின் உடன்பாட்டுடன் தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. என்னை விரும்பாத கட்சியில் நான் எப்படி பணியாற்ற முடியும். எனவே இனிமேல் கட்சியில் தீவிரமாக பணியாற்ற மாட்டேன். அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். பகுஜன் சமாஜ் கட்சியா? கேள்வி:- பகுஜன் சமாஜ் கட்சியில் இணையப் போவதாக தகவல் வந்துள்ளதே? பதில்:- இப்போதைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. பகுஜன் சமாஜ் கட்சியில் சேரும்படி எனக்கு அழைப்பு வந்திருப்பது உண்மை தான். ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை. அமைதியான முறையில் அரசியல் பணி மற்றும் சட்டமன்ற பணிகளில் ஈடுபடுவேன்.இவ்வாறு செல்வம் கூறினார். கவுன்சிலர்கள் ஆதரவு சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலராக உள்ள பிரபு, உமா சாசவி ஆகியோரும் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




