5. December 2008 06:06
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
4. October 2008 12:47
15. October 2008 12:52
27. August 2008 15:01
3. October 2008 18:45
இடதுசாரிகள், பாமக.வுடன் கூட்டு?: ஜெயலலிதா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
14. August 2008 06:58

jaya.jpgபாமக - இடதுசாரிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

தனது கொடநாடு பயணத்தை முடித்த பின்னர் நான்கு மாத இடைவெளிக்குப் பின், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தார் ஜெயலலிதா. அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஒருவர் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபட முடியும். நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கவில்லை. அரசியலைக் கூர்ந்து கவனித்து அறிக்கை வெளியிட்டேன்.

நான் எங்கும் போகவில்லை. தமிழகத்தில்தான் இருந்தேன். மக்கள் பிரச்னைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவும் கட்சியினருக்கு உத்தரவிட்டேன். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து எனது அரசியல் எதிரிகளை மண்ணைக் கவ்வச் செய்தேன்.

எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும்...

இந்திய அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, பாமக மற்றும் இடதுசாரிகளுடனான கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். பொறுத்திருந்து பாருங்கள். போக போகத் தெரியும்.

தேசிய நலன் சார்ந்த பிரச்னைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். அது பாமகவோ, இடதுசாரிகளாகவோ இருக்கலாம்.

காங்கிரஸýம், இடதுசாரிகளும் இணைந்து செயல்பட முடியும் என்கிறபோது அரசியலில் எதுவும் சாத்தியமே. அதனால் அதிமுகவும் இடதுசாரிகளும் இணைந்து செயல்பட முடியும்.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, தமிழக அரசு உண்ணாவிரதம் நடத்தியது தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் மேலும் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

அரசியலில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம். இது ஜனநாயகத்தின் சிறப்பு. எனவே, மாயாவதி பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறில்லை.

கடமை தவறிய மத்திய, மாநில அரசுகள்:

எந்த ஒரு மாநிலத்தில் புனித ஸ்தலம் இருந்தாலும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை.

அதிமுக ஆட்சியின்போது நாகூர் தர்காவில் விழா நடைபெற்றபோது சிறப்பான வசதிகள் செய்து தரப்பட்டன. அதேபோல வேளாங்கண்ணியிலும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்துக் கோயில் விழாக்களிலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இடவசதிகள் உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டன.

அமர்நாத் கோயில் நில விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கடமை தவறிவிட்டன என்றார்.


ஆந்திரத்தில் தமிழக "வியாதி'


ஆந்திரத்தில் தமிழக "வியாதி' பரவியுள்ளது என்று நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்குவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

தமிழகத்தில் நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் கட்சி தொடங்கி நடத்தி வருகின்றனர். இளைஞர்களை தங்களது கட்சிகளுக்குள் இழுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திரத்தில் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் சிரஞ்சீவி, புதிய கட்சி தொடங்க உள்ளார்.

இதுகுறித்து, கருத்துத் தெரிவித்த ஜெயலலிதா, ""தமிழகத்தில் ஏற்பட்ட வியாதி. தற்போது ஆந்திரத்துக்கும் பரவியுள்ளது'' என்றார்.

 
< முந்தைய   அடுத்த >