| ஜோர்ஜியா மீது போர் : ரஸ்யாவின் நியாயத்தன்மையை நிராகரித்தது அமெரிக்கா |
|
|
| வா.கி.குமார் | |
| 14. August 2008 16:45 | |
|
ஜோர்ஜிய நெருக்கடி தொடர்பாக நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்டலீசா ரைஸ், ஜோர்ஜியா மீதான ரஷ்யாவின் ஒருவார கால இராணுவ நடவடிக்கையானது பனிப்போர் நடைபெற்ற இருண்ட காலப்பகுதிக்கு இட்டுச் சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். "பனிப்போர் காலத்திலிருந்து வெளியே வருவதற்கான நேரம் இது என்பதையும் நாடுகளுக்கிடையிலான சமத்துவம், இறைமை மற்றும் பொருளாதார இணக்கப்பாடு என்பவற்றை கட்டியெழுப்புவதற்கான புதுயுகம் இது என்பதையும் ரஷ்யா இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியையே இது தருகிறது" என்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு தொடர்பாக ரைஸ் கருத்து வெளியிட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோசியைச் சந்தித்த கொண்டலீசா ரைஸ், நாளை வெள்ளிக்கிழமை ஜோர்ஜியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை, அமெரிக்கா மனிதாபிமான உதவிகளை ஜோர்ஜியாவுக்கு அனுப்பிவைத்துள்ள நிலையில், ரஷ்யா தனது சகல இராணுவ நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வேண்டுகோள்விடுத்துள்ளார். ஜோர்ஜியாவின் நிலப்பரப்புகளிலிருந்து ரஷ்யத் துருப்பினர் அனைவரும் திருப்பியழைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜோர்ஜியாவில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் அமெரிக்கப் படையினரை நிலைநிறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ள அவர், படையினர் மனிதாபிமானத் தேவைகளுக்கு மாத்திரமே அங்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|






ஜோர்ஜியா மீது மேற்கொண்ட படையெடுப்புக்காக ரஸ்யா கூறிய நியாயத்தன்மையை நிராகரித்துள்ள அமெரிக்கா, ஜோர்ஜியா மீதான படையெடுப்பை நிறுத்துவோம் என ரஸ்யா கூறியுள்ள உறுதிமொழியை பாதுகாக்கவேண்டும் என சவால் விடுத்துள்ளது.
