21. November 2008 13:32
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
12. October 2008 00:13
15. October 2008 12:52
29. September 2008 22:52
4. October 2008 12:47
அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. August 2008 17:40

சேது சமுத்திர திட்டம், பொடா சட்டம் போன்ற பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா கூறினார்.

டி.ராஜா நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

எந்த கட்சியுடன் கூட்டணி?

கேள்வி: வருகிற தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சியுடன் உங்கள் கட்சி கூட்டணி அமைக்கும்?

பதில்: தற்போது மக்கள் இயக்கத்தை நடத்துவதில் நாங்கள் முனைப்போடு உள்ளோம். இந்திய அரசியலில் ஒரு முடிவு எடுக்கும்போது அதனுடைய அடிப்படையில் தமிழகத்திலும் அது போல் முடிவு செய்வோம்.

கேள்வி: ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணி பற்றி பேசினால், ``பேசத்தயார்'' என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: சேதுசமுத்திர திட்டம், பொடா சட்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் எங்களுக்கு ஒத்த கருத்து இல்லையே?

இவ்வாறு டி.ராஜா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

காஷ்மீர் பிரச்சினை

காஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. காஷ்மீரில் தீவிரவாதம் தலை தூக்கியபோது கூட இந்த அளவுக்கு மதவெறி அரசியல் இருந்தது இல்லை. அங்கு ஒற்றுமையை காக்க வேண்டியது இந்திய அரசின் ஜனநாயக கடமை.

பா.ஜனதா கட்சி அகில இந்திய அளவில் மத வெறி அரசியலை முடுக்கி விட்டுள்ளது. அதனால் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட்டு போராட வேண்டும். அமர்நாத் கோவில் நில பிரச்சினையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மாற்று அரசியல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இருந்தாலும் அரசியல் தார்மீகத்தை இழந்து, மக்கள் நம்பிக்கையை இழந்த ஆட்சியாக உள்ளது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் சுய சார்புக்கொள்கையை பாதிக்கும் என்பதால்தான் எதிர்க்கிறோம்.

இந்த ஒப்பந்தம் கூடாது என மக்களை திரட்ட நாடுதழுவிய போராட்டத்தை நடத்தி வருகிறோம். பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் ஏற்பட வேண்டும். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

புதிய அமைப்பில் கம்ïனிஸ்டு கட்சிகள், பகுஜன்சமாஜ் போன்ற கட்சிகள் தற்போது உள்ளன. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

மாநிலகுழு கூட்டம்

வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஒசூரில் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற உள்ளது.

அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழல் குறித்து பேச உள்ளோம்.

காவிரி பிரச்சினையில் தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆகஸ்டு 20-ல் பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.இவ்வாறு டி.ராஜா கூறினார்.

 

 
< முந்தைய   அடுத்த >