| அமெரிக்காவில் ஜனநாயகக்கட்சி தலைவர் சுட்டுக்கொலை |
|
|
| வா.கி.குமார் | |
| 15. August 2008 18:17 | |
|
மாநில கட்சி தலைமை அலுவலகத்துக்கு தனி ஆளாக வந்த ஒரு மர்ம மனிதன், அலுவலகத்தில் இருந்த அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டான். அவன் 3 முறை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவனை போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் பலியானான். இந்த கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. அவரது மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் அவர் மனைவி ஹிலாரி ஆகியோர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாநில ஜனநாயகக்கட்சி தலைவராக இருந்தவர் பில் குவாட்னி. 48 வயதான இவர் செனட்டராகவும் பணியாற்றியவர்.
