5. December 2008 05:56
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
12. October 2008 00:13
3. October 2008 18:45
13. October 2008 13:01
19. August 2008 23:28
பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. August 2008 18:56

manmohan_001.jpgபயங்கரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் போக்கை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால் அதனுடன் மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி தொடர முடியாமல் போகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.

சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார்.

மதவெறியையூட்டி மக்களை பிளவுபடுத்துவது அமர்நாத் கோயில் நில விவகாரம் போன்ற பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கிவிடும் என்று எச்சரித்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

குந்தகத்தை ஏற்படுத்தும் காபூல் குண்டுவெடிப்பு: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புச் சம்பவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இந்த சம்பவம் பாகிஸ்தானுடனான உறவைச் சீரமைக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்றார்.

விலைவாசியை குறைக்க அரசு உறுதி: விலைவாசி உயர்வைப் பற்றி சுட்டிக்காட்டிய அவர் அத்தியாவசியப் பொருள்களின் விலையை குறைக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.

பயங்கரவாதம் வேரூன்றி வருவது பற்றி வேதனை தெரிவித்த மன்மோகன் சிங், இந்த பிரச்னையை ஒடுக்குவதில் தொடர்புடைய காவல்துறையையும் புலனாய்வு அமைப்புகளையும் பலப்படுத்துவது அவசரத்தேவை என்று குறிப்பிட்டார்.

காஷ்மீர்: அரசியல் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும்

ஜம்மு-காஷ்மீரின் எதிர்கால நலனை அரசியல் கட்சிகள் கருத்தில் கொண்டு அந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஓரணியில் திரளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி பேசிய பிரதமர், ஆறாவது ஊதியக் குழுவின் அறிக்கையை அரசு ஆர ஆராய்ந்து அதன் பரிந்துரைகளுக்கு மேலாகவும் சம்பளத்தை உயர்த்தி வழங்கியுள்ளது என்றார்.

 
< முந்தைய   அடுத்த >