5. December 2008 06:06
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
21. August 2008 23:30
29. September 2008 22:52
4. October 2008 12:47
15. October 2008 12:52
ஒலிம்பிக் நிகழ்வுகளின் பின்னணியில் கண்கட்டி வித்தைகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
16. August 2008 11:11

olympic-rings.pngசீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் 2008 ஆரம்ப வைபவத்தின்போது நடைபெற்ற சில தில்லு முல்லுகளை ஊடகங்கள் அம்பலத்திற்கு கொண்டுவந்துள்ளன. ஆரம்ப வைபவத்தில் பாடகியான சிறுமி Lin Miaoke  சினிமாப்பாணியில் தனியே வாயசைப்பை மட்டும் செய்ய வேறொரு சிறுமி உள்ளிருந்து அப்பாடலை பாடிய விடயம் வெளிவந்துள்ளது.

 yang_peiyi.jpg

அழகு போதாதென்று பின்னணியில்

பாடவைக்கபட்ட சிறுமி Yang Peiyi 

 lin_miaoke.jpg

மேடையில் வாயசைத்த அழகிய சிறுமி

Lin Miaoke

இனிமையான குரலை உடைய உண்மையான பாடகியான ஏழுவயது சிறுமி Yang Peiyi  நிகழ்ச்சி அமைப்பாளர்களால் அவரது அழகு போதாது என்று ஒதுக்கபட்டு மேடையின் பின்புறத்தில் நின்று பாடுமாறு பணிக்கபட்டார். அவரின் பாடலுக்கு வேறொரு அழகிய சிறுமியான Lin Miaoke  வாயசைப்பை மட்டும் செய்தார்.

இதுதவிர சீனாவில் வாழும் பல்வேறு சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்த மக்களும் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்வதாக வெளியே காட்டிக்கொண்டு பெரும்பான்மை இன மக்களை சிறுபான்மை இனமக்களைப்போல உடையணிவித்து காட்டிய கண்கட்டி வித்தையும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஆரம்ப வைபவத்தின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையிலும் உலக மக்களுக்கு வேடிக்கை காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களில் ஒளிபரப்பான வாணவேடிக்கை கணணி மூலம் வடிவமைக்கப்பட்டு உண்மையான வாணவேடிக்கை மிகைப்படுத்தப்பட்டு காட்டபட்ட விடயமும் உலக ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல விடயங்களில் மேற்கொள்ளபட்ட கண்கட்டி வித்தைகள் ஊடகங்களால் வெளிப்பட்டுத்தப்பட்டுள்ள விடயம் சீன அரசை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.

 
< முந்தைய   அடுத்த >