5. December 2008 05:59
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
27. August 2008 15:01
4. October 2008 12:47
12. October 2008 00:13
19. August 2008 23:28
கச்சத்தீவில் கொடி: இந்து மக்கள் கட்சியினர் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
16. August 2008 19:41

கச்சத் தீவில் தேசியக் கொடியை ஏற்றச் சென்ற இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் 33 பேரை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்த போலீஸôர் வெள்ளிக்கிழமை மாலையில் அவர்களை விடுதலை செய்தனர்.

ராமேசுவரம் பகுதி மீனவர்களின் உரிமைக்காக மத்திய அரசு இலங்கைக்கு வழங்கிய கச்சத்தீவை மீட்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் பயணத்தைத் துவக்கி வைத்தார்.

இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர் அண்ணாதுரை தலைமையில் வந்த 33 தொண்டர்களை ராமேசுவரம் டி.எஸ்.பி. கமலாபாய் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரி உள்ளிட்ட போலீஸôர் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, பாம்பன் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலர் எஸ். பிரபாகரன், மாநில இளைஞர் அணிச் செயலர் ஆ. சரவணன் ஆகிய 2 பேரை பாம்பன் போலீஸôர் கைது செய்தனர்.

 
< முந்தைய   அடுத்த >