| பொடா சட்டத்தை ரத்து செய்ததால் பயங்கரவாதம் வளர்கிறது இல.கணேசன் குற்றச்சாட்டு |
|
|
| வா.கி.குமார் | |
| 17. August 2008 10:22 | |
|
"பொடா சட்டத்தை ரத்து செய்ததால் பயங்கரவாதம் வளர்கிறது'' என்று இல.கணேசன் கூறினார்.
ஆர்ப்பாட்டம் இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை கண்டித்தும், பயங்கரவாதிகளை கைது செய்யக்கோரியும் பா.ஜ.க. தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட தலைவர் சைதை பூ.ஜெயவேல் தலைமை தாங்கினார். பா.ஜ.க. இளைஞரணி மாநில தலைவர் கோபகுமார், செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தேசத்திற்கு விரோதமானது மக்களை மதரீதியாக பிரிக்க வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்சிங், தனது சுதந்திர தின உரையில் பேசியிருப்பது நகைப்புக்கு உரியது. மத சார்பின்மை என்று போலித்தனமாக மக்களை பிரிக்க வேண்டாம். பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை ரத்து செய்துள்ளதால் பயங்கரவாதம் வளர்கிறது. பயங்கரவாதிகள் தேசத்திற்கு எதிரானவர்கள். அவர்களை பா.ஜ.க. எதிர்க்கிறது. இந்துக்களில் நக்சலைட்டுகள், எல்.டி.டி.யினர் இருக்கிறார்கள். அவர்களை ஒருபோதும் பா.ஜ.க. ஆதரிக்காது. பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்கும் ஆட்சி வரவேண்டும். பயங்கர வாதத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அத்வானி பிரதமராக வந்தால்தான் அது முடியும். தேசிய சிந்தனை, மத சிந்தனைக்கு வேறுபாடு தெரியாமல் கம்ïனிஸ்டுகள் பேசுகிறார்கள். அமர்நாத் யாத்திரிகர்களுக்கு தற்காலிக வசதிகள் செய்து கொடுக்கும் விவகாரம் தொடர்பாக கம்ïனிஸ்டுகளுக்கு குரல் கொடுக்க திராணிஇல்லை. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில மகளிரணி பொது செயலாளர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. தென்சென்னை மாவட்ட பார்வையாளர் தி.நகர் வேதா, செயலாளர் விஜயகாந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களை பிரிக்காதீர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்காதீர்கள் என இந்த அரசையும், மதசார்பற்ற வாதிகள் என மார்தட்டிக் கொள்கிற கட்சிகளையும் வேண்டுகிறேன். "மதச்சார்பற்ற நாடு'' என பெருமை பேசி வகுப்புவாத ரீதியாக மக்களை பிரிக்கும் பட்ஜெட் தந்த அரசு. சிறுபான்மை சமுதாய நல நிதி கடந்த ஆண்டு ரூ.500 கோடி. இந்த ஆண்டு ரூ.1000 கோடி. முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள மாவட்டங்களில் சிறப்பு கல்வி நிலையங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பது கல்வி மந்திரி அல்ல. சூப்பர் பிரதமர் சோனியா காந்தி. இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் சிறுபான்மை பிரிவுக்கு முன்னுரிமை- குறிப்பாக முஸ்லீம்களுக்கு முன்னுரிமை சொன்னவர் மதச்சார்பற்ற மன்மோகன்சிங். வங்கியில் கடன் பெறும் இந்துவுக்கு கூடுதல் வட்டி வீதம். அதே வங்கியில் முஸ்லீமுக்கு குறைந்த வட்டி வீதம். முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி பயில உதவித் தொகை. வகுப்பறையில் வகுப்புவாதம் நடந்தது. நடந்தபடி அவுரங்கசீப் கண்காட்சி நடத்தினால் அதை காவல்துறை அதிகாரியே வன்முறையில் கலைத்து போடும் அவல நிலை. ஹஜ் யாத்திரைக்கு சலுகை. ஆனால் அமர்நாத் யாத்திரைக்கு அடிப்படை வசதி செய்து தர மறுப்பு. இவ்வாறு இல.கணேசன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





