| குண்டு வெடிப்பால் ராணுவம் ஆத்திரம்: சோமாலியாவில் 38 அப்பாவிகள் சுட்டுக்கொலை |
|
|
| வா.கி.குமார் | |
| 17. August 2008 10:56 | |
|
சோமாலியா நாட்டில் பல ஆண்டுகளாக தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. தீவிரவாதிகளை ஒடுக்க, சோமாலியா படையினருடன் எத்தியோப்பியா நாட்டு ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மொகாதிசு நகரில் எத்தியோப்பியா படையினர், வாகனங்களில் சென்றபோது, தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்தது. இதில் ஒரு வாகனம் தூள் தூளானது. இதனால் வாகனங்களில் சென்ற எத்தியோப்பியா ராணுவத்தினர் ஆத்திரம் அடைந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 38 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் அந்த வழியாக பஸ்சில் சென்று கொண்டிருந்தவர்களும் அடங்குவர். மற்றொரு பகுதியில், சாலை ஓரத்தில் குண்டு வெடித்து 5 பேர் பலியானார்கள்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






