21. November 2008 13:29
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
15. October 2008 12:52
19. August 2008 23:28
13. October 2008 13:01
27. August 2008 15:01
தாற்காலிக தொழிலாளர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. August 2008 18:41

flag_usa.jpgதாற்காலிக அடிப்படையில் பணியில் அமர்த்திக் கொள்ளும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு விசா வழங்குவதற்கான நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.

இதற்கான திட்டத்தை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றப் பணிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

இதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எச்-2பி என்ற விசா திட்டத்தின்கீழ் தொழிலாளர்களை அழைத்து வரும்போது விசா தருவதற்கான நடைமுறைகள் மாற்றி அமைக்கப்படும்.

மேலும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க குடியேற்றத் துறை ஆணை பிறப்பித்த பிறகும் அத்தகைய தொழிலாளர்களை தமது நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா வசதியை ரத்து செய்யவேண்டும் என்றும் புதிய திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நாடுகள் பட்டியலில் இந்தியா, சீனா, ஈரான் உள்பட 8 நாடுகள் உள்ளன. லாவோஸ், எரித்ரியா, வியத்நாம், ஜமைக்கா, எத்தியோப்பா ஆகியவை மற்ற நாடுகள்.

நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டும் அத்தகைய ஊழியர்களை திரும்ப அழைத்துக் கொள்ளாத நாடுகளுக்கு விசா வசதியை ரத்து செய்யவேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 3 எம்பிக்கள் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மேற்குறிப்பிட்ட 8 நாடுகளும் சுமார் 1 லட்சத்து 39 ஆயிரம் பேரை திரும்ப அழைத்துக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றன. இவர்களில் சுமார் 18 ஆயிரம் பேர் கிரிமினில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் ஆவர்.

எச்-2பி விசா திட்டத்தின்கீழ் தாற்காலிகமாக தொழிலாளர்களை வெளிநாட்டிலிருந்து முதலாளிகள் குடியேற்றிக் கொள்ளலாம்.

குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் போன்றவர்கள் அமெரிக்காவில் கிடைக்க மாட்டார்கள். அத்தகையவர்களை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து குடியேற்றிக் கொள்ள எச்2பி விசா திட்டம் வகை செய்கிறது.

 
< முந்தைய   அடுத்த >