21. November 2008 13:54
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
12. October 2008 00:13
29. September 2008 22:52
27. August 2008 15:01
11. October 2008 23:48
4. October 2008 12:47
பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரப் பதவி விலகினார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. August 2008 17:54
musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரப் தனது பதவியில் இருந்து இன்று விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தற்காலிக ஐனாதிபதியாக ஒருவரும் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்வேஸ் முஷாரப் இன்று பாகிஸ்தான் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் உரையாற்றிய போதே தான் ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக அறிவித்தார்.

கடந்த 9 ஆண்டுகளாக நாட்டுக்காக தான் மிகக் கடுமையாகப் பாடுபட்டதாகவும் இன்றைய தினம் மிக முக்கியமான முடிவினை எடுக்க வண்டிய நிலையில் தான் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனக்கு எதிராக சிலர் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருவது துரதிஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட அவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தான் நேர்மையாக பாடுபட்டதாகவும் தெரிவித்தார்.

" நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன். நான் நேர்மையான முறையில் தேர்தலை நடத்தினேன்.

அதில் எனக்கு வேண்டிய, வேண்டாத அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்கச் செய்தேன். நாட்டில் ஜனநாயகம் வலுவடைய வேண்டும் என்பதற்காகவே இவற்றைச் செய்தேன்" என்றும் முஷாரப் தனதுரையில் குறிப்பிட்டார்.

" என்னை பழிவாங்க முயல்கிறார்கள். எனக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். ஆனால்இ என் மீதான எந்த கண்டனத் தீர்மானமும் நிற்காது.

எனக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை, பயமும் இல்லை" என்றும் முஷாரப் குறிப்பிட்டார்.

இந்த சூழ்நிலையிலேயே, தான் தனது ஜனாதிபதிப் பதவியை இராஜினாமா செய்வதாகவும்  இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

" இராஜினாமாவை ஏற்குமாறு எனது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் முப்படையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது தியாகம், என் மீது காட்டிய அன்புக்கு நன்றி" என்றும் முஷாரப் தொலைக்காட்சி மற்றும் வானொலி உரையின்போது குறிப்பிட்டார்.

 

 
< முந்தைய   அடுத்த >