21. November 2008 14:24
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
4. October 2008 12:47
11. October 2008 23:48
21. August 2008 23:30
12. October 2008 00:13
19. August 2008 23:28
சென்னை வந்த வேனில் ரூ.3-3/4 கோடி கொள்ளை தமிழ் தீவிரவாதி பிடிபட்டார் போலீஸ் விசாரணை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. August 2008 18:01

வேப்பூர் அருகே ரூ.3-3/4 கோடி வழிப்பறி கொள்ளை வழக்கு தொடர்பாக பிடிபட்ட தமிழ் தீவிரவாதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை கடை

திருச்சியில் உள்ள மங்கள் மங்கள் நகை கடை நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 10-ந்தேதி ஒரு கண்டெய்னர் வேனில் திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்றனர்.

அந்த வேனில் அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்ட ரூ. 3-3/4 கோடி இருந்தது. அந்த வேன் வேப்பூர் அருகே காலை 8-1/2 மணி அளவில் சென்றபோது போலீஸ் போல காக்கி-வெள்ளை பேண்ட் அணிந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வழிமறித்து அந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அந்த வேனை ராமநத்தம் அருகே உள்ள லக்கூர் தேசிய நெடுஞ்சாலை வரை ஓட்டி வந்து அங்கு நிறுத்தி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

அந்த வேனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த டிரைவர் பூபதி(வயது26), செந்தில்குமார்(38), நிறுவன மேலாளர் செல்வராசு(வயது 38) ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அடையாளம்

இது குறித்து போலீசார் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை டிரைவர் பூபதி, ஊழியர் செந்தில்குமார், மேலாளர் செல்வராசு ஆகியோரிடம் அடையாளம் காட்டினர். மேலும் பல்வேறு கொள்ளையர்களையும் அந்த ஊழியர்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தி அடையாளம் காட்டும்படி போலீசார் கூறினர்.

அதன் ஒரு கட்டமாக திட்டக்குடியை அடுத்த எடைச்செருவாயை சேர்ந்த கணேசன்(வயது 35) என்ற ஒரு தீவிரவாதியை அழைத்து வந்து அடையாளம் காடடி விசாரணை நடந்தது. பின்னர் கணேசன் விடுவிக்கப்பட்டார்.

தமிழர் விடுதலை இயக்கம்

அதை தொடர்ந்து கடலூர் முதுநகர் கோதண்டராமபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் லெனின் என்ற கோவிந்தராஜ்(வயது 35) என்பவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். இவர் தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்.

இவர் கடந்த 2006-ல் அமெரிக்க ஜனாதிபதி புஷ் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடலூர் எஸ்.என். சாவடி ரெயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்த வழக்கிலும் நாகப்பட்டினம் பழையாறு மீனவர் பகுதியில் இயங்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் கொள்ளையடித்த வழக்கிலும் கைதாகி கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாகி வெளியே வந்தவர்.

தற்போது அவர் விருத்தாசலத்தை அடுத்துள்ள ஊ.மங்கலம் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் தங்கி உள்ளார்.

இந்நிலையில் ரூ. 3-3/4 கோடி கொள்ளை வழக்கில் லெனின் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

இந்த நிலையில் வேப்பூர் அருகே நடந்த ரூ.3-3/4 கோடி வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த லெனின் கோவிந்தராஜன் என்பவரை போலீசார் கைது செய்ததாகவும், அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை கைப்பற்றியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தீவிர விசாரணை

ரூ.3-3/4 கோடி கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். அந்த வகையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழ் தீவிரவாதி லெனின் கோந்தராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறோம்.

கொள்ளை சம்பவத்தில் அவர் சம்பந்தப்பட்டு இருக்கிறாரா? என்று இன்னும் உறுதியாகாத நிலையில் அவரை கைது செய்யவில்லை. மேலும் பிடிபட்ட லெனின் கோவிந்தராஜிடம் இருந்து பணம் ஏதும் கைப்பற்றவில்லை.

உண்மை குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களை கைது செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 
< முந்தைய   அடுத்த >