5. December 2008 06:12
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
4. October 2008 12:47
27. August 2008 15:01
21. August 2008 23:30
29. September 2008 22:52
74-வது பிறந்த நாள் ; முரசொலி மாறன் சிலைக்கு, கருணாநிதி மலர்தூவி வணங்கினார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. August 2008 18:59

முரசொலிமாறன் 74-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி மலர்தூவி வணங்கினார்.

வண்ண மலர்களால் அலங்கரிப்பு

முன்னாள் மத்திய மந்திரி முரசொலிமாறனின் 74-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலிமாறன் முழு உருவச்சிலை வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆளுயர மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.

முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று காலை 9.30 மணிக்கு முரசொலி அலுவலகம் வந்தார். அங்குள்ள முரசொலி மாறன் சிலைக்கு மலர்தூவி வணங்கினார். அப்போது முதல்-அமைச்சர் கருணாநிதி சற்று கண்கள் கலங்கி, சோகத்துடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் காணப்பட்டார்.

மத்திய, மாநில அமைச்சர்கள்

கருணாநிதியைத் தொடர்ந்து அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, கீதாஜீவன், ராமச்சந்திரன், திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ராதிகா செல்வி, கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோர் முரசொலி மாறன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வசந்தி ஸ்டான்லி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி.ராஜா, இந்திரகுமாரி, புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி ஜானகிராமன், துணைமேயர் சத்தியபாமா, டெல்லி தமிழக பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் எல்.பலராமன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் முரசொலிமாறன் சிலைக்கு மலர்தூவி வணங்கினார்கள்.

தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து ஆகியோரும் முரசொலி மாறன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 
< முந்தைய   அடுத்த >