| ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் கனடா நாட்டு ராணுவத்துக்கு தலீபான் எச்சரிக்கை |
|
|
| வா.கி.குமார் | |
| 19. August 2008 06:13 | |
|
2,500 கனடா ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்க ராணுவத்துடன் சேர்ந்து கனடா நாட்டு ராணுவமும் ஈடுபட்டு உள்ளது. கனடா நாட்டு ராணுவ வீரர்கள் 2500 பேர் ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போரில் 90 கனடா நாட்டு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளும் ஆக்கப்பூர்வமான பணியிலும் ஈடுபட்டு வருகின்றன. சாலை அமைத்தல், பள்ளிக்கூடம், அணைகட்டுதல், மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைப்பது ஆகிய பணிகளிலும் அவை ஈடுபட்டு உள்ளன. ஆப்கானிஸ்தான் சிறுவர்களுக்காக கல்விப்பணியில் ஈடுபட்டு இருந்த 2 கனடா நாட்டு தன்னார்வ தொண்டர்கள் ஜாக்கி கிர்க், ஷிர்லி கேஸ் ஆகியோர் கடத்தி செல்லப்பட்டு, லோகர் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து கனடா நாட்டு பொதுமக்களுக்கு தலீபான் திறந்த மடல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் தலீபான் கூறி இருப்பதாவது:- கனடா நாட்டுக்கு சென்று ஆப்கானிஸ்தானிகள் கனடா நாட்டுக்கு சென்று கனடா நாட்டுக்காரர்களை கொல்லவில்லை. மாறாக கனடா நாட்டுக்காரர்கள் தான் ஆப்கானிஸ்தானுக்கு வந்து ஆப்கானிஸ்தானியர்களை கொல்கிறார்கள். எனவே ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டவேண்டும் என்று கனடா நாட்டு மக்களாகிய நீங்கள் உங்கள் நாட்டு அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் உங்கள் நாட்டவர்களின் கைகளில் கனடா நாட்டினர் கொல்லப்படமாட்டார்கள். தொடர்ந்தால் பழிவாங்குவோம் உங்களுடன் நாங்கள் நட்புறவு வைத்துக்கொள்ளவே விரும்புகிறோம். கனடா நாட்டு அரசாங்கம் எங்கள் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்தால், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்குவோம். உங்கள் நாட்டு வீரர்களையும், மக்களையும் கொல்வோம்.லோகரில் நடந்த சம்பவம் மீண்டும் மீண்டும் நடக்கும். இவ்வாறு அந்த திறந்த மடலில் தலீபான் கூறி உள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்து ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கனடா நாட்டு ராணுவ வீரர்கள், எங்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும். இல்லாவிட்டால் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று தலீபான் எச்சரித்து உள்ளது.
