21. November 2008 12:32
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
29. September 2008 22:52
3. October 2008 18:45
12. October 2008 00:13
13. October 2008 13:01
2008 ல் இதுவரை 21 பாதசாரிகள் சுவிஸ் வீதிகளில் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
19. August 2008 12:52
unfall_statistik.jpgசுவிற்சர்லாந்தில் வீதிவிபத்துகளில் இவ்வாண்டு முதல் அரையாண்டில் 157 பேர் இறந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டின் இக்காலப்பகுதியை  விட நான்கு வீதம் குறைவானதாகும். அத்துடன் வீதி விபத்துகளில் 2145 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள். இத்தொகை 2007 ம் ஆண்டின் முதல் அரையாண்டு விட 13 வீதம் குறைவானதாகும்.

கூட்டாட்சி அரசின் விபத்து தடுப்பு ஆலோசனைப்பிரிவினர் மாநில காவற்துறையின் அனுசரணையுடன் மேற்படி புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி புள்ளிவிபரங்களின்படி 21 பாதசாரிகள் சுவிஸ் வீதிகளில் 20008 ன் முதல் அரையாண்டில் பலியாகியுள்ளனர். அத்துடன் 79 பேர் சிற்றூர்தி விபத்திலும், 34 பேர் மோட்டார் சைக்கிள் விபத்திலும், 11 பேர் சைக்கிள் விபத்திலும், 12 பேர் பாரவூர்தி விபத்திலும் இவ்வருடம் பலியாகியுள்ளனர்.

பாரிய விபத்துகள் குறைவடைந்துள்ளதானது மிகவும் மகிழ்வான விடயம் என்று  கூட்டாட்சி விபத்து தடுப்பு ஆலோசனைப் பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும் விபத்துகளை குறைப்பதற்கான மேலதிக படிமுறைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

விபத்துகளை தடுப்பதற்காக வீதி ஒழுங்கு விதிகளை சீராக நடைமுறைபடுத்தி, மேலும் இறுக்கமான வீதிப்போக்குவரத்து சட்டவிதிகளை அமுல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளபட்டு வருகின்றது.  
 
< முந்தைய   அடுத்த >