21. November 2008 13:43
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
11. October 2008 23:48
13. October 2008 13:01
21. August 2008 23:30
4. October 2008 12:47
பர்வேஷ் முஷாரப்பின் பதவி விலகல் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி-பிலாவல் பூட்டோ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. August 2008 13:40
musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் பதவியிலிருந்து விலகியமையானது ஜனநாயக சக்திகளுக்குக் கிடைத்த வெற்றியென பாகிஸ்தானின் ஆளும் கூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. 


 
ஜனநாயக ஆட்சிக்கு இருந்த பெரிய முட்டுக்கட்டை நீக்கப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஊடகங்களிடம் கூறினார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக முஷாரப் அறிவித்தவுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷரீப் தலைமையிலான கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி வீட்டு முன்பு கூடி தங்கள் மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தியுள்ளனர். 

இதற்கிடையில் பர்வேஷ் முஷாரபை பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்புவதா அல்லது இல்லையாவென கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்வார்களென பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் முஷாரப் செய்த தவறுகளுக்காக அவரை தண்டிக்க வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சி வலியுறுத்தி வருகின்றது.

இந்தநிலையில் பாகிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவரே தேர்ந்தெடுக்கப்படுவாரென கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ கூறியுள்ளார்.

 

 
< முந்தைய   அடுத்த >