| பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 23 பேர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 19. August 2008 13:45 | |
|
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் நுழைவாயிலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 23 பேர் உயிரிழந்ததுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் பதவி விலகுதாக அறிவித்து 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது டெரா இஸ்மாயில் கான் மாவட்ட வைத்தியசாலை நின்ற பத்திரிகை நிருபர் வைத்தியசாலை வளாகத்தில் 18 சடலங்கள் இருப்பதை கண்டதாகக் கூறினார். இந்த நிலையில் எவரும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் உரிமை கோரவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறதஇ
இதேவேளை இது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலா, இல்லைய என்பதைத் தம்மால் உறுதிப்படுத்திக் கூற முடியாதென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போராடி வந்த பர்வேஷ் முஷாரப், பதவி விலகியதை பாகிஸ்தான் தலிபன்கள் வரவேற்றுள்ளனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




