5. December 2008 05:55
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
11. October 2008 23:48
12. October 2008 00:13
21. August 2008 23:30
4. October 2008 12:47
முஷரப் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்கிறார் அமெரிக்காவில் சில மாதங்கள் தங்குகிறார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. August 2008 05:50

musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய முஷரப் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித பயணம் செய்கிறார்.

அதன் பிறகு அவர் அமெரிக்கா சென்று தன் மகன் மற்றும் தம்பி ஆகியோரின் வீட்டில் சில மாதங்கள் தங்கி விட்டு திரும்புகிறார். பாகிஸ்தானிலேயே தங்கி இருக்க திட்டமிட்டு இருக்கிறார்.

ஒப்பந்தம்

பாகிஸ்தான் ஜனாதிபதி முஷரப் தன் மீது கொண்டு வரப்படுவதாக இருந்த கண்டன தீர்மானத்தை தவிர்ப்பதற்காக அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கூட்டணிக்கும், முஷரப்புக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து தான் அவர் பதவி விலகினார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அவர் மீது வழக்கு தொடரப்படமாட்டாது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து தான் அவர் பதவி விலகினார் என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்துக்கு கியாரண்டர்களாக ராணுவ தளபதி கயானியும், அமெரிக்கா, இங்கிலாந்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகளும் இருப்பார்கள்.

வெளியேறினார்

பதவி விலகிய பிறகு இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையை விட்டு முஷரப் வெளியேறினார். ராவல்பிண்டியில் உள்ள முகாம் அலுவலகத்தில் தங்கினார். அங்கேயே சில நாட்கள் தங்கி இருக்க திட்டமிட்டு இருக்கிறார்.

முஷரப் வெளிநாடு செல்லப்போவதாக வதந்திகள் எழுந்தன. ஆனால் அவர் பாகிஸ்தானிலேயே தங்கி இருக்க முடிவு செய்து இருக்கிறார்.

ஆளும் கூட்டணி அவர் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள பயந்து அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்ற தோற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை. அதை தவிர்ப்பதற்காக அவர் அங்கேயே தங்கி இருக்க திட்டமிட்டு இருக்கிறார்.

மெக்காவுக்கு புனித பயணம்

சில நாட்களுக்கு பிறகு அவர் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு புனித பயணம் (உம்ரா) செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

அதன் பிறகு அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கு அவர் தம்பி நவேத் சிகாகோவில் டாக்டராக இருக்கிறார்.

அவர் மகன் பிலால் பாஸ்டன் நகரில் தங்கி இருக்கிறார். அவர்களுடன் கொஞ்ச காலம் தங்கி இருக்கிறார்.

 

 
< முந்தைய   அடுத்த >