| கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 06:20 | |
|
150-வது ஆண்டு நிறைவு விழா மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதையொட்டி 3 பல்கலைக்கழகங்களும் இணைந்து பல்வேறு கல்வித்திட்டங்களை பரிமாறிக்கொண்டன. விழாவையொட்டி பல்கலைக்கழக மானியக்குழுவும் அதிக நிதியை 3 பல்கலைக்கழகங்களுக்கும் ஒதுக்கி உள்ளது. விழாகொண்டாட்டமாக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டுவிழா நிறைவு விழா செப்டம்பர் மாதம் 5-ந் தேதி நடக்க உள்ளது. விழாவுக்கு கவர்னரும் சென்னை பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்குகிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகிக்கிறார். டாக்டர் பட்டம் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரதமர் மன்மோகன்சிங், சோனியாக காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் 3 பேருக்கும் அவர்களின் அரசியல் மற்றும் பொதுநலச்சேவையை பாராட்டி சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டங்களை கவர்னர் பர்னாலா வழங்குகிறார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றுப்பேசுகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி சென்னை பல்கலைக்கழகம் விழாக்கோலம் பூண உள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டு விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி நடக்கிறது. விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.
