| டேவிஸ் கிண்ண டென்னிஸ்: தலைவர் பதவியிலிருந்து விலகினார் லியாண்டர் பயஸ். |
|
|
| PTR. | |
| 20. August 2008 07:30 | |
டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவர் பதவியிலிருந்து லியாண்டர் பயஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அகில இந்திய டென்னிஸ் சங்கம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைவராக முன்னாள் டேவிஸ் கிண்ண வீரர் எஸ்.பி.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிஸ் கிண்ண உலகக் குழு போட்டியில் ருமேனியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போட்டி செப்டம்பர் 19 முதல் 21 வரை நடைபெறுகிறது. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஜப்பானுடனான டேவிஸ் கிண்ண போட்டியின்போதே பயஸ் தலைவராக இருப்பதற்கு மகேஷ் பூபதி, பிரகாஷ் அமிர்தராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பயஸ் இதுவரை கருத்து தெரிவிக்காமலே இருந்து வந்தார். இதனிடையே, பயஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், அணியில் வீரராக அவர் இடம்பெறுவார். 17 ஆண்டுகளாக விளையாடி வரும் பயஸ் இதுவரை 44 டேவிஸ் கிண்ண போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தலைவராக பயஸ் பங்கேற்றுள்ள போட்டிகளில் இந்தியா 83 ஆட்டங்களில் வென்றுள்ளது. 31 ஆட்டங்களில் தோல்வியுற்றுள்ளது. இதேவேளை, டேவிஸ் கிண்ண அணியில் இடம்பெற்றிருந்த ரோஹன் போபண்ணாவுக்கு பதிலாக சோமதேவ் தேவ்வர்மன் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடிவருவதால் சோமதேவ் சேர்க்கப்பட்டுள்ளதாக டென்னிஸ் சங்க பொதுச் செயலர் அனில் கன்னா தெரிவித்தார். டேவிஸ் கிண்ண இந்திய அணி விவரம்: லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சோமதேவ் தேவ்வர்மன், பிரகாஷ் அமிர்தராஜ். |
| < முந்தைய | அடுத்த > |
|---|