5. December 2008 06:09
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
13. October 2008 13:01
27. August 2008 15:01
19. August 2008 23:28
4. October 2008 12:47
பீஜிங் ஒலிம்பிக் 2008: 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வரா உசைன் போல்ட்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
PTR.   
20. August 2008 07:41
usain_bolt_new_record.jpgபீஜிங் ஒலிம்பிக்கில், 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ஜமேக்காவின் உசைன் போல்ட், உலகின் மின்னல் வேக வீரராக ஜொலிக்கின்றார். அடுத்து, இன்று நடைபெறவுள்ள 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்று தங்கத்தை பெறுவார் என்று உலக விளையாட்டு ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமேக்காவின் 21 வயது இளம் வீரர் உசைன் போல்ட் தங்கம் வென்று அசத்தினார். 6 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட இவர் போட்டித் தூரத்தை 9.69 விநாடிகளில் கடந்து தனது சொந்த சாதனையை (9.72 ) முறியடித்தார். படுவேகமாக ஓடிய இவர் ஒரு கட்டத்தில் பின்னால் திரும்பிப் பார்த்தார். தனக்கு அருகில் ஒருவர் கூட இல்லாதால் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றார்.

இதனால் கடைசி 30 மீட்டர் தூரத்தை மிகவும் " ரிலாக்சாக ' ஓடினார். அத்துடன் இவரது இடது கால் "ஷ_லேஸ் 'அவிழ்ந்து விட்டதால் ஓடுவதில் சிரமம் ஏற்பட்டதாம். கொஞ்சம் "சீரியசாக' ஓடியிருந்தால் 9 விநாடிகளில் கடந்து எட்ட முடியாத சாதனையை நிகழ்த்தியிருக்கலாம். போல்ட் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்த ஜமேக்கா ரசிகர்களுக்கு தங்களது நாட்டின் மற்றொரு வீராரன அசபா பாவல் ஐந்தாவது இடத்தையே பெற்றது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

200 மீட்டர் ஓட்டத்திலும் உசைன் போல்ட் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏற்கனவே உலக ஜூனியர் தடகள போட்டியில் 19.93 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். ஜமேக்காவில் நடந்த தேசிய தடகள போட்டியில் 19.67 விநாடிகளில் கடந்துள்ளார். மின்னல் வேகத்தில் ஓடுவதால் தடகள பிரியர்கள் இவரை "லைட்னிங் போல்ட்’ என்றே செல்லமாக அழைக்கின்றனர்.

 
< முந்தைய   அடுத்த >