21. November 2008 13:20
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
11. October 2008 23:48
21. August 2008 23:30
19. August 2008 23:28
12. October 2008 00:13
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கொழும்பில் காணவில்லையென முறைப்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. August 2008 13:28

radha.jpgயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 3 இளைஞர்களை கொழும்பில் காணவில்லை என்று பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17.08.2008 அன்று வடக்கிலிருந்து கொழும்புக்கு கடவுச்சீட்டு செய்வதற்காக தனது சகோதரன் வீட்டில் தங்கியிருந்த கொக்குவிலைச் சேர்ந்த குழந்தைவேல் நவரூபன் (25 வயது) அவர்களது நண்பர்களான பன்னாலை தெல்லிப்பழையைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி அனந்தன் (27 வயது) ,கல்லடி ஒழுங்கை கோண்டாவிலைச் சேர்ந்த சிவபாதம் நிரோசன் (28 வயது) ஆகிய மூவருமே சம்பவதினத்தன்று கடவுச்சீட்டு எடுப்பதற்காகச் சென்றவர்கள் இடையில் காணாமல் போயுள்ளதாக நவரூபனின் சகோதரன் ஸ்ரீரங்கன் பிரதி அமைச்சரிடமும் மோதரை பொலிஸிலும் கெசல்வத்த பொலிஸிலும் புகார் செய்துள்ளார்.

இது சம்பந்தமாக பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் உயர்மட்ட அதிகாரிகளிடம் அறிவித்து மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார்.

 

 
< முந்தைய   அடுத்த >