| பொலிஸ் அதிகாரியின் மனைவி, பிள்ளைகள் 17 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 13:42 | |
பயங்கரவாதிகள் செல்வதாகக் கூறி பயணிகள் வாகனமொன்றிலிருந்து பலரைக் கைது செய்த கண்டித் தலைமையகப் பொலிஸார், அதில் பயணம் செய்த பொலிஸ் அதிகாரி ஒருவரது மனைவி, பிள்ளைகளை 17 மணிநேரம் தடுத்துவைத்த சம்பவமொன்று கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; கடந்த 10 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் அக்கரைப்பற்றிலிருந்து கண்டியூடாக கொழும்பு நோக்கி பயணிகளுடன் வந்த வான் ஒன்றை கண்டி நகரில் தலைமையக பொலிஸ் நிலையப் பொலிஸார் வழிமறித்துள்ளனர். ஆண்கள் பெண்களென மூன்று தமிழர்களும் 12 முஸ்லிம்களும் அந்த வானில் பயணம் செய்தனர். அதிகாலை 1.30 மணியளவில் அந்த வானை வழிமறித்த பொலிஸார் விடுதலைப்புலிப் பயங்கரவாதிகள் வானில் பயணிப்பதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகக் கூறி 15 பயணிகளையும் கைதுசெய்து கண்டி தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்தனர். இந்த வானில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கொழும்பு வலய நடவடிக்கைப் பிரிவுப் பொறுப்பதிகாரியின் மனைவியும் குடும்பத்தினரும் பயணம் செய்திருந்தனர். இவர்கள் அனைவரையும் பொலிஸார் அங்கு கொண்டு வந்தபோது மேற்படி பொலிஸ் அதிகாரியின் மனைவி தன்னை அடையாளப்படுத்தியதுடன் தனது கணவரின் பதவி நிலைகுறித்துக் கூறியும் அவர்களை விடுவிக்காது 17 மணிநேரம் தடுத்த வைத்திருந்தனர். பொலிஸ் அதிகாரியின் மனைவியும் குடும்பத்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அவர் உடனடியாகத் தலையிட்டு அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டும் உடனடியாக விடுவிக்காது நீண்டநேரத்தின் பின்னரே விடுவித்தனர். சிறுபான்மையின பொலிஸ் அதிகாரியென்பதால் அவரது மனைவியும் குடும்பத்தவர்களும் பெரும்பான்மையின பொலிஸாரினால் மிக மோசமாக நடத்தப்பட்டது குறித்து கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






பயங்கரவாதிகள் செல்வதாகக் கூறி பயணிகள் வாகனமொன்றிலிருந்து பலரைக் கைது செய்த கண்டித் தலைமையகப் பொலிஸார், அதில் பயணம் செய்த பொலிஸ் அதிகாரி ஒருவரது மனைவி, பிள்ளைகளை 17 மணிநேரம் தடுத்துவைத்த சம்பவமொன்று கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
