| வன்னி உறவினர்களுக்கு இலங்கை வங்கி ஊடாக குடாநாட்டு மக்கள் பணம் அனுப்ப விரைவு சேவை |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 14:08 | |
|
கிளிநொச்சி இலங்கை வங்கி கிளைக்கு இவர்கள் பணத்தை அனுப்பி வைக்க முடியும். வன்னிப்பகுதியில் உள்ளவர்களுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் பணம் அனுப்புவதற்கு அருகில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளின் முகாமையாளருடன் தொடர்பு கொண்டால் உரிய ஏற்பாடுகள் செய்து தருவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இச் செயற்பாடு இலங்கை வங்கியின் அவசரகால உதவியாக செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கைவங்கி தற்போது கணினி மயப்படுத்தப்பட்ட சேவையை ஆரம்பித்துள்ளதால் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு உடனடியாகவே பணத்தை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




வன்னிப்பகுதியில் தற்போது நிலவும் போர்ச்சூழல் காராணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடாநாட்டிலுள்ள அவர்களின் உறவினர்கள் பணம் அனுப்பி வைக்க இலங்கை வங்கியின் யாழ்.மாவட்ட கிளைகளில் விரைவான வங்கிச் சேவை நடைமுறையில் இருப்பதாக வடபிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் என்.சிவரெட்ணம் தெரிவித்தார்.
