5. December 2008 05:55
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
21. August 2008 23:30
4. October 2008 12:47
15. October 2008 12:52
13. October 2008 13:01
இலங்கை-இந்திய ஒருநாள் கிரிக்கட் தொடர்: 2வது போட்டியில் போராடி வென்றது இந்தியா. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
PTR.   
20. August 2008 14:18
in_sl_2.jpgஇலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியக் கிரிக்கட் அணி, தம்புள்ளவில் இன்று இடம்பெற்ற 2வது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. இதனையடுத்து, 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா, 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியுள்ளது.

தம்புள்ள ரங்கிரி சர்வதேசக் கிரிக்கட் மைதானத்தில் பகல் ஆட்டமாக நடைபெற்ற இன்றைய போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி, இலங்கை அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்தார். இதன் படி, முதலில் ஆடிய இலங்கை 38.5 ஓவருக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில், திலின துசார 44 ஓட்டங்களையும், நுவான் குலசேகர 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சில் சகீர் கான் 4 விக்கட்டுக்களையும், பிரவீன் குமார் 3 விக்கட்;டுக்களையும் கைப்பற்றினர். 45 ஓட்டங்களுக்குள் இலங்கை அணியின் 6 விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

143 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலையில் பதிலளித்தாடிய இந்தியா, 39.4 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது. இந்த அணியின் சார்பில் தோனி 39 ஓட்டங்களையும், விராஜ் ஹோலி 37 ஓட்டங்களையும், சுப்பிரமணியம் பத்திரிநாத் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர். இலங்கை அணியின் சார்பில் பந்து வீச்சில், குலசேகர, அஜந்த மெண்டிஸ், திலின துசார ஆகியோர் தல 2 விக்கட்டுக்களை வீழ்தினர்.

இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் சகீர் கான் தெரிவானார். 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் அடுத்த ஆட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, தம்புள்ளவில் நடைபெறவுள்ளது.

 
< முந்தைய   அடுத்த >