| கிளிநொச்சியில் பெரும் தாக்குதலுக்கு தயார் நிலையில் விடுதலைப்புலிகள் |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 18:11 | |
|
இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதி நோக்கி பல படையணிகள் முன்நகர்வை ஆரம்பித்துள்;ளபோதிலும் இதில் படையினரின் 57 ஆவது படையணியே வழுவான நிலையில் முன்நகர்வை மேற்கொண்டுவருவதாகவும் அந்த இணையத்தளத்தின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மூலம் படையினரின் தற்போதைய மனநிலையை உடைத்து தமது உறுப்பினர்களின் மன நிலையை அதிகரிக்க இந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மணலாறு பகுதிகளில் உள்ள மோட்டார் நிலைகளும் கிளிநொச்சிக்கு நகர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் வழமையாக மேற்கொண்டுவரும் பெட்டி வடிவில் வளைத்து தாக்கும் முயற்சியை படையினர் தமது பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் மூலம் முறியடித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படையினர் தொடர்ச்சியாக முன்னேறி வரும் நிலையில் அவர்களுக்கெதிராக பெரும் தாக்குதலை தொடுத்து அதன்மூலம் படையினரின் மனநிலையை உடைத்து அவர்களின் போர் தந்திரோபாயங்களை அழிப்பதற்கு படையினர் மீதான தொடர்ச்சியான பெரும் தாக்குதல் ஒன்றை தொடர்வதற்கான தேவை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|



வன்னி நோக்கி படை நகர்வினை மேற்கொண்டுவரும் முக்கிய படையணிகளில் ஒன்றான 57 டிவிசன் படையணியை தகர்க்க தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகள் கிளிநொச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுவருவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
