| விடுதலை செய்யக்கோரி நளினி மனு பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு இறுதி கெடு |
|
|
| வா.கி.குமார் | |
| 21. August 2008 07:36 | |
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு இறுதி கெடு வழங்கியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் இரு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்கள், அவர்களை ஏற்கனவே தமிழக அரசு விடுவித்துள்ளது என்றும், ஆனால், 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுதலை செய்ய அரசு மறுத்துவிட்டது என்றும் கூறியிருந்தார். இதேபோல, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென்று மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இறுதி கெடு நளினி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தமிழக அரசும், மத்திய அரசும் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தமிழக அரசு வக்கீல் அருண் கோர்ட்டில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதேபோல, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஒரு வாரம் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் கேட்டார். இதை கேட்ட நீதிபதி ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டும், ஏன் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் இக்கோர்ட்டில் ஆஜராகவில்லையே என்று நீதிபதி கேட்டார். இனி ஒரு வாரம் மட்டுமே காலஅவகாசம் வழங்கப்படும் என்றும், அதற்குள் மத்திய அரசும், தமிழக அரசும் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று `கெடு' விதித்து நீதிபதி உத்தரவை பிறப்பித்தார். வழக்கு விசாரணையை வரும் 29-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் கோர்ட்டு தானே விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு இறுதி கெடு வழங்கியுள்ளது.
